மத்திய அமைச்சர்- பியுஷ் கோயலுக்கு நன்றி தெரிவித்த மு.க.ஸ்டாலின்.! - Tamil Crowd (Health Care)

மத்திய அமைச்சர்- பியுஷ் கோயலுக்கு நன்றி தெரிவித்த மு.க.ஸ்டாலின்.!

 மத்திய அமைச்சர்- பியுஷ் கோயலுக்கு நன்றி தெரிவித்த மு.க.ஸ்டாலின்.!

ரெம்டிசிவர்(Remdesivir) மருந்து ஒதுக்கீடு உயர்த்தியதற்கு மத்திய அமைச்சர் பியுஷ் கோயலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

தமிழகத்திற்கு ரெம்டிசிவர் மருந்து ஒதுக்கீடு நாளொன்றுக்கு 7,000 என்ற அளவில் இருந்த நிலையில், முதல்வரின் கோரிக்கையை ஏற்று நாளொன்றுக்கு 20 ஆயிரமாக அதிகரித்துள்ளது.

இந்த செய்தியையும் படிங்க…

 கொரோனாவில் இருந்து தப்புவது எப்படி? – புதிய பரிந்துரைகள்..!! 

இந்நிலையில், மத்திய அமைச்சர் பியுஷ் கோயலுக்கு நன்றி தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில், தமிழகத்திற்கான ரெம்டிசிவர்(Remdesivir) மருந்து ஒதுக்கீட்டை 7 ஆயிரத்திலிருந்து 20 ஆக உயர்த்திய மத்திய அரசுக்கு நன்றி எனவும், தற்போதைய சூழலில் உயிர்காக்கும் மருந்து, ஆக்சிஜன் உபகரணங்கள் தேவை இன்றியமையாதது என தெரிவித்துள்ளார்.நாளை மறுநாள் முதல் தனியார் மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளுக்கு அந்தந்த மருத்துவமனைகளில் ரெம்டிசிவர்(Remdesivir) மருந்து வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment