மகளிர்க்கான மருத்துவ குறிப்புகள்:கர்ப்பிணிகளின் கவனத்திற்கு. - Tamil Crowd (Health Care)

மகளிர்க்கான மருத்துவ குறிப்புகள்:கர்ப்பிணிகளின் கவனத்திற்கு.

 

மகளிர்க்கான மருத்துவ குறிப்புகள்: கர்ப்பிணிகளின் கவனத்திற்கு

  •  கர்ப்பிணிகளுக்கு சிறுநீர் கழிப்பது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியமான மற்றொரு விஷயம் மலம் கழித்தல், மலம் கழிப்பது கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் ஒரு சாதாரண உபத்திரவம்.
  •  தினம் ஏதாவது ஒரு கீரையையும் ,பழங்களையும், பச்சையாகவும், வெந்த காய்கறிகளையும் சாப்பிட்டு வந்தால் இந்த உபத்திரவம் ஏற்படாது .
  • கர்ப்பிணி வியாதியால் பாதிக்கப்பட்டவர்கள் போல் படுத்திராமல் நடமாடித் திரிவது மலக்கட்டு ஏற்படுவதை தடுப்பதற்கு ஒரு சிறந்த வழியாகும்.
  •  காலையும் ,மாலையும் சிறிது தூரம் நடப்பது ஒரு சிறந்த பயிற்சி ஆகும்.
  •  அவ்விதம் போய் வருவதால் உடலுக்கு ஏற்படும் நன்மை ஒருபுறமிருக்க மனமும் பலம் அடைகிறது.
  •  கர்ப்பிணிகள் கூடியவரையில் எண்ணெய் பலகாரங்களை தவிர்ப்பது நல்லது. எண்ணெயில் கொழுப்புச் சத்து அதிகமாக இருக்கிறது. அது ஜீரணமாவதற்கு அதிக நேரம் ஆகும். சீக்கிரம் ஜீரணமாகாத உணவுகள் கர்ப்பிணிகளுக்கு வாந்தியை உண்டு பண்ணும்.
  •  இந்த சமயத்தில் உப்பை குறைத்துக் கொள்ள வேண்டும். உப்பை சாப்பிடுவதால் உடம்பில் நீர் கோர்த்துக் கொள்ளும். இதனால் எடை பரபரவென்று அதிகமாகலாம். சில சமயங்களில், இது ரத்த சுத்தியை குறைத்துக் குறைப்பிரசவத்தில் வந்து முடியும்.
  •  கர்ப்பமாக உள்ள பெண்கள் முடிந்தவரையில் “எக்ஸ்ரே” எடுத்துக் கொள்ளவே கூடாது.
  •  கர்ப்பிணி பெண்கள் தர்பூசணி பழம் சாப்பிடவேண்டும். தர்பூசணி பழம் சாப்பிட்டால் பிறக்கும் குழந்தை அழகாக இருக்கும். தர்பூசணி பழம் சாப்பிடுவதால் மூளை பலமும் .கல்லீரலுக்கு வலுவும் கூட ஏற்படுகிறது.
  •  கர்ப்பமாக்கிவிட்ட  பெண்களுக்கு மாதவிலக்கு வராது. மாதவிலக்கு வரவில்லை என்றாலும் உண்மையில் கர்ப்பமா, இல்லையா என்பதை தெரிந்து கொள்ள உடனே மாதவிலக்கு வரும் சில மாத்திரைகளை வாங்கி சாப்பிடுகிறார்கள். இதனால் ,கருச்சிதைவு ஏற்படலாம் .குறையுடன் பிள்ளைகள் பிறக்கலாம். ஆகையால் கர்ப்பமாக இருக்குமோ என சந்தேகம் வந்தால் முதல் மூன்று மாதங்கள் வரையிலும் எந்த மருந்தும் சாப்பிடக்கூடாது. இந்த சமயத்தில் தலைவலிக்கு ,ஜலதோஷத்துக்கு, மாத்திரைகள் சாப்பிடுவது கூட ஆபத்து.
  • காய்ச்சல் வந்து விட்டாலும் டாக்டரிடம் உண்மையைச் சொல்லி மிகவும் தேவையானால் மட்டுமே டாக்டர் தரும் மருந்தை சாப்பிட வேண்டும்.
  •  சில பெண்களுக்கு குழந்தை பிறந்த பிறகு பற்கள் ஆடும். முழங்கால்களும், தொடைகளும் வலிக்கும். இதற்கு காரணம் அவர்கள் கர்ப்பமாக இருக்கும் போது உடம்பில் சுண்ணாம்பு சத்து குறைவாக இருந்தது தான்.
  •  கர்ப்பமாக இருக்கும் பெண்கள் தினமும் ஏதாவது ஒரு கீரையை சாப்பிட்டு கொண்டு வர வேண்டும்.
  •  சிலருக்கு நூதனமாக பொருட்களை உண்ண வேண்டும் என்ற ஆசை உண்டாகும். ஊறுகாய், எலுமிச்சை பழம், புளிப்பு, உப்பு, சில பலகாரங்கள், சாம்பல் போன்றவற்றை விரும்பி சாப்பிட தோன்றும். இதற்கு காரணம், கர்ப்பிணி சாப்பிடும் உணவு நல்ல போஷாக்கு உள்ளதாக இராது .உடலில் உயிர் சத்துக்கள் குறையும் போது நினைத்ததை எல்லாம் சாப்பிட தோன்றும். அதை கவனித்து தினந்தோறும் சாப்பிடும் உணவை சரி செய்தால் இந்த ஆசைகள் பறந்துவிடும்.
  •  கர்ப்பிணிகள் உடல் தலைமுடியை சுத்தமாக வைத்திருப்பதை போன்று பற்களையும் சுத்தமாக வைத்திருக்கவேண்டும். காலையிலும், மாலையிலும் அதாவது இரவு படுக்கப் போவதற்கு முன்பும் பற்களை சுத்தம் செய்ய வேண்டும். சிலருக்கு இந்நாட்களில் பல்லில் ரத்தம் கசிவது உண்டு.

Leave a Comment