மகளிர்க்கான மருத்துவ குறிப்புகள்: கர்ப்பமான பெண்களும், மூச்சுப் பயிற்சியும். - Tamil Crowd (Health Care)

மகளிர்க்கான மருத்துவ குறிப்புகள்: கர்ப்பமான பெண்களும், மூச்சுப் பயிற்சியும்.

மகளிர்க்கான மருத்துவ குறிப்புகள்: கர்ப்பமான பெண்களும், மூச்சுப் பயிற்சியும்.

  1. கர்ப்பமாக இருக்கும் பெண்கள் தினமும் சிறிது நேரம் ஓய்வாக மல்லாந்து படுத்துக் கொண்டு மூச்சை மெல்ல உள்ளே இழுத்து மெல்ல வெளியே விட வேண்டும். இப்படியே நாள்தோறும் பல முறைகள் மூச்சை நன்றாக இழுத்து விட்டுக் கொண்டிருந்தால் பிரசவத்தின்போது வேதனை ஏதும் இல்லாமல் சுலபமாக பிள்ளை பெறலாம்.
  2.  தாய்மை அடைந்த பெண்கள் தங்களை மிகவும் கவனித்துக் கொள்ள வேண்டும்.
  3.  தங்களுக்கு மட்டும் சாப்பிடவில்லை தங்கள் குழந்தைக்கும் சேர்த்து சாப்பிடுகிறோம். எனவே கூடுதல்’உலோகச் சத்து, புரதம், வைட்டமின்கள்’ஆகியவை தேவைப்படுகிறது. என்பதை மனதில் வைத்துக்கொண்டு சாப்பிடுதல் தங்களுக்கும் தங்கள் குழந்தைக்கும் நல்லது.
  4.  இரவு நேரங்களில் கர்ப்பிணிகள் தளர்வான லேசான உடைகளை அணிதல் நல்லது.
  5.  வாந்தி நிற்க இளநீரில் ஏலக்காய் அல்லது தனியா தூள் 2 கிராம் கலந்து சாப்பிட்டால் விடாத வாந்தியும் கட்டுப்படும்.

 பெண்களுக்கு இருதய நோய் இந்நிலையில் வரும்:

  •  மாதவிடாய் நின்ற இரண்டு மூன்று (2-3)வருடத்திற்கு பின்
  •  மாதவிடாய் உள்ள பொழுதும், சர்க்கரை வியாதி ஏற்படும் போதும் 
  • மாதவிடாய் உள்ள பொழுதும் சிறுநீரகம் பாதிக்கப்படும் போதும் 
  • பிறவியிலேயே இருதய கோளாறு வரும்போது இருதய தாக்கு வரலாம். எச்சரிக்கையாக இருங்கள்.

Leave a Comment