மகளிருக்கான மருத்துவ குறிப்புகள்: குறைப்பிரசவம்.
குறை பிரசவம் என்றால் என்ன?
பிரசவ காலத்திற்கு முன்னதாகவே ஏற்படக் கூடிய ஒன்றுதான் குறை பிரசவம். பிரசவ காலம் என்பது சுமார் ஒன்பது மாதங்கள், அந்த ஒன்பது மாத காலம் வளர்ச்சியடைந்த குழந்தை முழுமையானதாகவும், ஆரோக்கியமானதாகவும் இருக்கும். இந்த காலத்துக்கு முன்னதாகவே பிறக்கும் சிசுக்கள் முழுமையான வளர்ச்சி உள்ளது என்று சொல்ல முடியாததாக இருக்கும்.
இந்த பிரசவ காலத்திற்கு ஏதேனும் வரைமுறை உண்டா?
சாதாரண பிரசவ காலத்திற்கு முப்பத்தி நான்கு(34) வாரங்களுக்குள் இந்த பிரசவம் நிகழலாம்.
குறை பிரசவத்திற்கு முக்கிய காரணம் என்ன?
ஏராளமான காரணங்களால் குறைப்பிரசவம் நிகழ்கிறது.
- குழந்தையை தாங்கியுள்ள பிளாடர் பலவீனமாக இருக்கலாம் .
- கர்ப்பப்பையின் வாய் கருவை மூடிக்கொண்டு இருக்கும் தன்மையை இழத்தல்.
- குழந்தை கர்ப்பப் பையில் வளர்ந்து வரும் நிலை
- அதிக குழந்தைகளை பெற்று இருத்தல்.
போன்ற பல காரணங்களால் குறைப்பிரசவம் ஏற்பட வாய்ப்பு உண்டு.
பிரசவ காலத்தின் போது இரத்தப் போக்கு ஏற்படுவதால் கூட குறைபிரசவம் நிகழலாம்
ரத்தத்தில் உள்ள காரத்தன்மை ‘RH’ வித்தியாசப்படுவது குறை பிரசவம் நிகழ வாய்ப்பு உண்டா?
பொதுவாக இதனால் குறைப்பிரசவம் அதற்கு வாய்ப்பில்லை ஆனாலும் தாய் ஆர்எச் ‘RH’ நெகட்டிவ் தன்மை உடையவராகவும், பிறக்கப்போகும் குழந்தை ஆர்எச் ‘RH’ பாசிட்டிவ் தவறாக இருக்கும் பட்சத்தில் டாக்டர்களே பிரசவ காலத்திற்கு முன் கூட்டியே குழந்தையை வெளியே எடுக்க வேண்டியுள்ளது.
இதற்கு முக்கிய காரணம் எதிர் தன்மையுள்ள ‘கீஏ’ குணத்தால் குழந்தைக்கு பலவித நோய்கள் வரலாம் என்பதால் குழந்தையை முன்கூட்டியே கர்ப்பப்பையிலிருந்து எடுக்கிறார்கள்.
குறைப்பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகள் பலவீனமாக இருப்பதன் காரணம் என்ன?
- உடல் உறுப்புகளும் முழுமையான வளர்ச்சி அடையாதது தான் காரணம்.
- மூளையில் உள்ள தமனிகள், ரத்தத்தை எடுத்துச் செல்லும் நுண்ணிய குழாய்கள் எல்லாம் வலுப்பெறாததாகவும், பூரண வளர்ச்சியடையாததாகயிருக்கும்.
- தவிர, சுவாசப் பை கூட பலவீனமாக இருப்பதால் சுவாசிப்பதும் கஷ்டம் இருக்கும்.
- நோய் எதிர்ப்பு அணுக்கள் குறைந்த அளவே இருக்கும்.
- இதனால் பிறக்கும் குழந்தை அடிக்கடி நோய்வாய் படலாம்.
- தாயின் மார்பகத்தின் பாலை உறிஞ்ச கூட குழந்தைக்கு தெம்பில்லாமல் இருக்கலாம். இதனால் போதுமான உணவு கிடைக்காமல் போகிறது.
இவையெல்லாம் பொதுவான குறைகள் என்றாலும் எல்லா குழந்தைகளும் இப்படி இருக்கும் என்பதில்லை.
குறை பிரசவ குழந்தைகள் எப்படி காப்பாற்றுகிறார்கள்?
விஞ்ஞான முன்னேற்றத்தால் 6 மாதத்தில் பிறந்த குழந்தையை கூட ஆரோக்கியமாக வாழ வைக்க முடிகிறது. நியூனடட் இன்டென்சி யூனிட் மூலம் குழந்தையை இப்போது பராமரிக்கிறார்கள்.
அதாவது பிறந்தவுடன் 3/4 கிலோ முதல் ஒரு கிலோ எடை வரை உள்ள குழந்தைகளில் 40 சதவீதம் இந்த முறையில் காப்பாற்றப்படுகின்றன.
28 நாட்கள் வரை இந்த குழந்தைகளை இண்டின்ஸ் யூ கேர் பிரிவில் வைத்து கண்காணிக்கிறார்கள்.
3/4 கிலோ எடை குறைவாக பிறக்கும் குழந்தைகளை காப்பாற்றுவது அபூர்வம்.
குறைப்பதற்கான வழி ஏற்பட்டவுடன் என்னென்ன தற்காப்பு முறைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இன்குப்பேட்டறை தயாராக வைத்திருப்பார்கள். அதுமட்டுமல்லாமல் சுத்தமான பிராணவாயு தடையின்றி கிடைக்கும் வகையிலும் இருக்கும். அடிக்கடி அவசர கண்காணிப்பிலும், அந்த தாய்மார்கள் கவனிக்கபடுவார்கள். இப்படி இன்குபேட்டரில் வைக்கப்படும் சிசுக்கள் சாதாரண நிலையில் வெளி உலக உஷ்ணத்தை தாங்கிக் கொள்ளும் வரை அதிலேயே வைக்கப்படும்.
குறை பிரசவ குழந்தைகள் ஆகாரம் என்ன?
- பிறந்தவுடன் 5% குளுகோஸ் நிறைந்த வாட்டர் தரப்படுகிறது.
- கொஞ்சம் கொஞ்சமாக அதற்கு ஒத்துக் கொள்ளும் அளவு பாலூட்ட வைக்கிறார்கள்.
- குறை பிரசவ குழந்தைகள் எப்போது சாதாரண குழந்தைகள் போலாகும்?
- குழந்தையானது 2.5 கிலோ எடையை அடையவேண்டும். நன்கு சுவாசித்து நன்கு பால் அருந்த வேண்டும். வைட்டமின்” ஏ, சி, டி” முதலியவற்றை நேரடி உணவாக கொடுக்கும் நிலைக்கு வரவேண்டும் .
- இவற்றுக்கப்பால் குழந்தையை குறைந்தபட்சம் நான்கு மாதங்கள் வரை தகுந்த மருத்துவ கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டும்.
அதன் பிறகு குழந்தை மற்ற குழந்தைகளைப் போல வளரும். அந்த குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு மற்ற குழந்தைகளைப் போலவே ஆரோக்கியமாக வாழும்.
குறைப்பிரசவம் ஆப்ரேஷன் முறையில் செய்யப்படுவதா?
பொதுவாக, இல்லை.
- கர்ப்பப்பையில் குழந்தை இருக்கும் தன்மை
- கர்ப்பப்பையின் வாயின் அளவு
இவற்றைப் பொறுத்து.
குறை பிரசவத்தை தடுக்க முடியாதா ?
முடியும்.
- சரியான மருத்துவ கண்காணிப்பு
- தேவையான சத்துணவு
- மருந்து உட்கொள்ளுதல்
போன்றவற்றின் மூலம் தடுக்கலாம்.
நல்ல மருத்துவக் கண்காணிப்பில் இருந்தால் குறை பிரசவம் பற்றி பயப்பட வேண்டியதில்லை.