மகளிருக்கான மருத்துவ குறிப்புகள்:
- சீரகத்தை அரைத்து தலையில் பூசி வந்தால் பேன் தொல்லை அகலும்.
தலைமுடி உதிர்கிறதா?
- தலைமுடி உதிர்ந்து விடுகிறதே என்று வருத்தப்படும் பெண்கள், வாரத்திற்கு ஒருநாள் வெந்தயத்தை அரைத்து தலையில் தேய்த்து சிறிது நேரம் ஊறவைத்து குளித்து வந்தால் முடி உதிராது, கருமையாக இருக்கும். .
அதிக சூடும் வேண்டாம்? அதிக குளிர்ச்சியும் வேண்டாம்?
- பல பெண்கள் குடல்புண் நோயால் அவதிப்பட்டு வருகிறார்கள்.
- இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் அந்த காரணங்களில் இதுவும் ஒன்றாகும்.
- இவர்கள் காபி, டீ போன்ற பானங்கள் சுடச்சுட பருகுவார்கள். அப்போதுதான், உடம்பில் சுறுசுறுப்பு ஏற்படும் என்று. இது பெரும் தவறு. கொதிக்க கொதிக்க பானங்களை பருகினால் தேகத்தில் சுறுசுறுப்பு வராது. குடல்புண் தான் வரும். (அல்சர்) தான் ஏற்படும்.
- இதேபோல மிகவும் குளிர்ந்த பானங்களை பருகினால் உடலில் புண் ஏற்பட வாய்ப்புண்டு. எனவே, பானங்களை அதிக சூடாகவோ, அதிகக் குளிர்ச்சியாகவோ பருக வேண்டாம் .பின் குடலில் புண் ஏற்படும். வயிற்று வலியால் அவதி அடைய வேண்டாம்.