மகளிருக்கான மருத்துவ குறிப்பு:
மூட்டு பிடிப்பு :
பெண்களுக்கு ஏற்படும் நோய்களில் இதுவும் ஒன்று.
- இந்த நோய் ஆட்களை முடக்கிப் போட்டுவிடும். சற்று வயதான பெண்களை எந்த வேலையையும் செய்ய விடாமல் செய்துவிடும்.
- மூட்டுகளில் பிடிப்பு ஏற்பட்டு விட்டால், கைகால்களை மடக்கவோ, நீட்டவோ சிரமம் ஏற்பட்டு ஒரே இடத்தில் உட்கார வைத்துவிடும்.
இந்த நோய்க்கு காரணம்:
- வாதசுரம், வயிற்று உபாதை மற்றும் ரத்த ஓட்டம் தடைப்படுதல்.
- இவைகளை விட இருதய கோளாறு நாளிலேயே மூட்டுகளில் அதிக வலி ஏற்படும்.
- நீரிழிவினால் அல்லது ரத்த அழுத்தத்தினால் சரியாக உடலை கவனிக்காத பட்சத்தில் இருதயத்தில் ரத்த ஓட்டம் தடைபடும்.
- ரத்த ஓட்டம் தடைபடும் போது மூட்டுகளில் குடைச்சல் ஏற்பட்டு வலி தோன்றும்.
- மூட்டுகளில் விட்டுவிட்டு வலிகள் ஏற்படும் போது அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் உடனே மருத்துவரை சந்திப்பது மிகவும் நல்லது.
- பிறவியிலேயே இருதய கோளாறு இருந்தால் மூட்டுகளில் வலி வீக்கம் ஏற்படும்.
- எனவே, இந்நோய் உடனுக்குடன் பார்த்து விடுவது மிகவும் நல்லது.
முக்கியமான ஒன்றை பெண்கள் கவனிக்க வேண்டும்:
- மூட்டுகளில் வலி வீக்கம், வாத சுரம் ஆகியவை ஆண்களைவிட பெண்களுக்கு அதிகம் வருகிறது.
- இதை உணர்ந்து பெண்கள் செயல்பட வேண்டும்.
- காலை முதல் இரவு வரை நாயாய் வேலை செய்கிறோம். இதனால்தான் மூட்டுகளில் வீக்கம், வலிகள் என்று அமைதியாக இருந்து விடாதீர்கள்.
மூட்டுகளில் கோளாறு என்றால் உடனே மருத்துவரை அணுகி:
- இருதயத்தில் பிரச்சினை என்பதை பரிசோதித்துக் கொள்ளுங்கள் .
- இதை ஆரம்பத்திலேயே கண்டுவிட்டால் இருதய கோளாறு விரட்டிவிடலாம்.
- இந்த நோய் 60 ,70 வயது முதிய பெண்களை மிகவும் பாதிக்கும்.
- எனவே மாத்திரை, மருந்துகளை சாப்பிட்டு ஓரளவு நோயை குறைக்கலாம்.
இந்த நோயில் இருந்து மீள செய்ய வேண்டியவை:
நல்ல உடற்பயிற்சி,
சீரான உணவுப் பழக்கம்,
- சுறு சுறு சுறுப்பான பயன்பாடுகள், செயல்பாடுகள்.
இவைகளை செயல்படுத்தினால் ரத்த ஓட்டம் பிரச்சனை இல்லாமல் ஓடும். ரத்த ஓட்டத்தில் பாதிப்பு இல்லாமல் இருந்தாலே மூட்டுப் பிடிப்பு ஏற்படாது. என்று உறுதியாகக் கூறலாம்.