போராட்டங்களுக்கு- தடை விதிக்கப்படுமா..?? - Tamil Crowd (Health Care)

போராட்டங்களுக்கு- தடை விதிக்கப்படுமா..??

 போராட்டங்களுக்கு- தடை விதிக்கப்படுமா..??

 போராட்டங்களுக்கு தடை விதிக்கப்படுமா?

கொரோனா பரவல் அதிகரிப்பை தடுக்க, புதிய அரசு பொறுப்பேற்கும் வரை, போராட்டங்களுக்கு, தமிழக அரசு தடை விதிக்க வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது. 

அரசு பணிகளுக்கு எதிராகவும், அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தருவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், சில தரப்பினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதில் பங்கேற்கும்படி, பொது மக்களுக்கும் கட்டாய அழைப்பு விடுக்கின்றனர். அவசியம் இன்றி கூட்டம் சேருவதால், கொரோனா பரவல் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இந்த செய்தியையும் படிங்க

10 – ஆம் வகுப்புக்கு தேர்வுகள் நடத்தப்படும் என்று வெளியான தகவல் தவறு : பள்ளிக் கல்வித் துறை..!! 

மேலும், தற்போது, தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே, அரசு முன்னுரிமை அளிக்க முடியும். சட்டசபை தேர்தல் ஓட்டு எண்ணிக்கை, மே, 2ல் நடக்கிறது. தொடர்ந்து, புதிய அரசு பொறுப்பேற்கும். அதன் பின், போராட்டக்காரர்களின் பிரச்னைகளுக்கும் நிரந்தர தீர்வு காண, நடவடிக்கை எடுக்க முடியும். 

எனவே, கொரோனா பரவல் அதிகரிப்பை தடுக்கும் விதமாக, புதிய அரசு பொறுப்பேற்கும் வரை, தொழிற்சங்கத்தினர் உள்ளிட்டோர் நடத்தும் போராட்டங்களுக்கு, தடை விதிக்க வேண்டும். மீறி போராட்டங்களில் ஈடுபடுவோர் மீது, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Leave a Comment