அரசியலிலிருந்தே ஒதுங்குகிறேன்- சசிகலா.
பொது எதிரியான திமுக ஆட்சியில் அமரக்கூடாது
தமிழக அரசியலில் திடீர் திருப்பமாக அரசியலிலிருந்தே ஒதுங்குவதாக சசிகலா அறிவித்துள்ளார். சிறையிலிருந்து வெளியே வந்தபோது தீவிர அரசியலில் ஈடுபடப்போவதாக கூறிய அவர் தற்போது அரசியலிலிருந்தே விலகுவதாக அறிவித்துள்ளார்.
ஜெயலலிதாவின் உண்மைத் தொண்டர்கள்
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜெயலலிதாவின் உண்மைத் தொண்டர்கள்அனைவரும் ஒன்றிணைந்து ஒற்றுமையுடன் வரும் தேர்தலில் பணியாற்றிட வேண்டும் எனக் கூறியுள்ளார்.பொது எதிரியான திமுகவை ஆட்சியில் அமர விடாமல் தடுத்து விவேகமாக இருந்து ஜெயலலிதாவின் பொற்கால
ஆட்சி தமிழகத்தில் நிலவிட தொண்டர்கள் பாடுபட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். தான் என்றும் பதவிக்காகவோ பட்டத்திற்காகவே அதிகாரத்திற்காகவோ ஆசைப்பட்டதில்லை எனவும் தமிழக மக்களுக்கு தான் என்றென்றும் நன்றியுடன் இருப்பேன் என்றும் சசிகலா கூறியுள்ளார். தான் அரசியலை விட்டு ஒதுங்கி இருந்து ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி அமைய எல்லாம் வல்ல இறைவனிடமும் பிரார்த்தனை செய்து கொண்டே இருப்பேன் எனவும் தாம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சசிகலா தெரிவித்துள்ளார்.
டிடிவி தினகரன்-கருத்து
இதற்கிடையே சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், சசிகலாவின் முடிவு தனக்கே அதிர்ச்சியளிப்பதாகக் கூறினார். சித்தி என்பதற்காக தனது கருத்துக்களை சசிகலா மீது திணிக்க முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.