பொதுமக்கள் எதிர்பார்ப்பு: சித்தா கோவிட் கேர் -துவங்கப்படுமா..!!
திண்டுக்கல் மாவட்டத்தைப் பொறுத்தவரையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் எகிறிக் கொண்டே இருக்கிறது. தினமும் 100 க்கும் குறைவானோர் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது 200 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.தடுப்பூசி, தனிமைப்படுத்துதல் மட்டுமே தற்போது சிகிச்சையில் பிரதானமாக ஒன்றாக உள்ளது.
இந்த செய்தியையும் படிங்க….
42 ஆயிரத்தில்(42,000/-), -சென்னை தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை: தேர்வு கிடையாது..!!
ஆனால் கடந்தாண்டு கொரோனா துவக்கத்தின்போது அரசு சித்த மருத்துவத்தில் கபசுர குடிநீர், நிலவேம்பு போன்றவற்றை பரிந்துரைத்தது.ஏனோ 2ம் அலை தொடங்கியது முதல் இதுவரை சித்தா குறித்து எவரும் அதிகம் பேசவில்லை. அதன் மருந்துகளை பரிந்துரைப்பதுமில்லை.
ஆனால், கொரோனா மையங்களில் கபசுரகுடிநீர் மட்டும் வழங்கப்பட்டு வருகிறது.மீண்டும் வருமா சித்தமருத்துவம்கடந்தாண்டு திண்டுக்கல், காந்தி கிராம பல்கலை, பழநி பகுதிகளில் 80 முதல் 100 படுக்கைகளுடன் ‘சித்தா கோவிட் கேர்’ தனியாக அமைக்கப்பட்டது. வழக்கமாக அலோபதியில் 7 முதல் 14 வரை சிகிச்சை பெற்றால், சித்த மருத்துவத்தில் 4 முதல் 5 நாட்களில் குணமடைந்து வீடு திரும்பினர்.
கடந்த 2020 அக்டோபர் இறுதியில் பாதிப்பு குறைந்து சித்தா மையங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன.
இந்த செய்தியையும் படிங்க…
இன்று முழு ஊரடங்கு: என்னென்ன இயங்கும்..?? என்னென்ன இயங்காது..??
மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களில் 35 சதவீதம் பேர் சித்த மருத்துவத்தால் குணமடைந்துள்ளனர். இம்மையங்களில் ஒரு உயிரிழப்பு கூட ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, மாவட்ட நிர்வாகம் மீண்டும் சித்தா கோவிட் கேர் துவங்க ஆர்வம் காட்ட வேண்டும்.