பொதுமக்கள் உடனே செய்யவேண்டியது., சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பரபரப்பு பேட்டி.!
பொது மக்கள் முக கவசம் அணிவதை தவிர்க்க கூடாது என்று, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சற்று முன்பு செய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவிக்கையில்,
இந்திய அளவில் ஒப்பிடும் போது தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று பாதிப்பு அளவு 3 சதவீதம்தான். கொரோனா அறிகுறிகள் தென்பட்ட உடனே மருத்துவமனைக்கு செல்வது அனைவருக்கும் நல்லது.
இந்த செய்தியையும் படிங்க…
சென்னையில் 15 மண்டலங்களிலும் களப்பணி ஆய்வு செய்து வருகின்றனர். கொரோனா அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும். சென்னை, ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் தீவிர கொரோனா பரிசோதனை முறைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியையும் படிங்க…
தமிழகம் முழுவதும் 11000 படுக்கைகள் சிகிச்சை கொரோனா அளிப்பதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள மாநிலக் கல்லூரி மாணவர் விடுதியை கொரோனா மாற்றப்பட்டுள்ளது.
கொரோனா நோய் தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், மாநகராட்சி அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து கொண்டு வருகின்றனர். நோய்த்தொற்று தற்போது அதிகமாக உள்ளதை மறுக்க முடியாது.” என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.