பெர்டிலைசர்ஸ் நிறுவனத்தில் டெக்னீசியன் வேலை -வேண்டுமா..??
மத்திய அரசின் பெர்டிலைசர்ஸ் அண்ட் கெமிக்கல்ஸ் ஆப் திருவாங்கூர் லிமிடெட் (FACT) உரம் தயாரிப்பு நிறுவனத்தில் காலியாக உள்ள டெக்னீசியன் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்த செய்தியையும் படிங்க….
ஸ்டெர்லைட் விவகாரம் – 28 ஆண்டுகள் என்ன நடந்தது?
பணி: Technician (Process)
வயது வரம்பு : 18 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். வயதுவரம்பில் சலுகைகோருவோருக்கு அரசு விதிமுறைகளின்படி வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.
தகுதி: வேதியியல், தொழில்துறை வேதியியல் பாடங்களில் பி.எஸ்சி அல்லது பொறியியல் துறையில் வேதியியல், வேதியியல் டெக்னாலாஜி, பெட்ரோகெமிக்கல் டெக்னாலாஜி போன்ற ஏதாவதொரு பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ. 20,000
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Dy General Manager (HR)EST, FEDO Building, The Fertilisers And Chemicals Travancore Limited, Udyogamandal. PIN-683 501
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 30.04.2021
மேலும் விவரங்கள் அறிய www.fact.co.in அல்லது http://fact.co.in/images/upload/NOTIFICATION-FINAL-1-_2__15042021_1996.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.