பெருந்தொற்று காலங்களில் -ஆரோக்கியமாக வாழ செய்ய வேண்டியவை..!! - Tamil Crowd (Health Care)

பெருந்தொற்று காலங்களில் -ஆரோக்கியமாக வாழ செய்ய வேண்டியவை..!!

 பெருந்தொற்று காலங்களில் -ஆரோக்கியமாக வாழ செய்ய வேண்டியவை..!!

நம் நாட்டிற்கான உடை– 

  1. குறிப்பாக ஆண்களுக்கு உகந்தது, வேட்டி. உடல் மெலிந்தாலும், பெருத்தாலும் பயன்படுத்தலாம். 
  2. தேவையான நேரங்களில் பிறஆடைகள் பயன்படுத்தலாம். 
  3. நம் வெப்ப மண்டல நாட்டிற்கு கைத்தறி ஆடையே ஏற்றது. 
  4. அதையே பயன்படுத்தி இயற்கையோடு இணைந்து நம் முன்னோர்கள் வாழ்ந்தனர். 
  5. தமிழ்நாட்டில் குடியானவர்கள் முதல் பெரும் பணக்காரர்கள் வரை தங்கள் வீட்டு முற்றங்களில் பசுஞ்சாணம் பயன்படுத்துவது கிருமிநாசினியாகவும் சகல ஐஸ்வர்யத்தையும் தரும் அன்றாட நிகழ்வாகவும் வழக்கில் இருந்து வருகிறது.
  6. தற்போது பஞ்சகவ்யம் பயன்படுத்துவது இயற்கை உரமாக வளம் உண்டாக பயன்படுகிறது. 
  7. கூழானாலும் குளித்துக் குடி, கந்தையானாலும் கசக்கிக் கட்டு என்ற மூதுரை வாக்குப்படி தனி மனித சுகாதாரம் மேம்படுகிறது.
  8.  வெளி இடங்களுக்கு சென்று வந்தால் கை, கால்கள் சுத்தம் செய்துவிட்டு வீடுகளுக்குள் பிரவேசிக்க அன்றே அறிவுறுத்தினர். 
  9. தற்போது கொரோனா வைரஸ் மிகப்பெரிய சவாலாக விளங்குகிறது.
  10. அம்மை நோய் ஏற்பட்ட காலத்தில் பாதிக்கப்பட்டோர் வீடுகளில் அவர்களை குடும்பத்தாரோடு தனிமைப்படுத்துதல் (Quarantine) செய்துள்ளோம்.
  11. இதே நெறிமுறைகளை, வழிமுறைகளை நாம் இப்போது கொரோனா வைரஸ் தொற்றுக்கு பயன்படுத்தினாலே நல்ல முறையில் சமூகத் தொற்றாக மாறாமல் இருக்கச் செய்யலாம். 
  12. பெருந்தொற்று காலங்களில் அம்மன் கோவிலில் கஞ்சி பிரசாதமாக தரப்படும்.
  13.  மிளகு, சீரகம், வெந்தயம், ஏலக்காய், பூண்டு மற்றும் மருந்து சரக்குகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். 
  14. மாவுச்சத்து, புரதச்சத்து, கொழுப்புச் சத்துக்கள் உடலுக்கு வலிமை தரும். 
  15. நமது பாரம்பரியத்தில் மஞ்சள் முக்கிய இடத்தை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
  16. சித்த மருத்துவ கோட்பாட்டின்படி வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்று உயிர்தாதுக்களும் சமநிலையில் அமைந்தால் நோயற்ற நிலை ஏற்படும். 
  17. இந்த மூன்றின் சமநிலை வேறுபட்டால் உடல் நலிவுற்று நோய்நிலை அடையும்.
  18.  இந்த மூன்று உயர்தாதுக்களின் வேறுபாட்டினை சரிசெய்யக்கூடிய ஆற்றல் உடையது, மஞ்சள். 
  19. தற்போதைய காலத்தில் சோப்பை பயன்படுத்தி கை கழுவுவது, முக கவசம் அணிவது போன்ற தற்காப்பு விஷயங்களை கடைபிடிக்க அறிவுறுத்தப்படுகிறோம். 
  20. மஞ்சளில் உள்ள குர்குமின் வேதிப்பொருள் புற்று நோயை எதிர்க்கும் தன்மையுடையது. 
  21. நாம் பழங்கால வாழ்வியல், உணவு, பழக்கவழக்கங்களை கடைப்பிடித்து இன்றும்.. என்றும்.. ஆரோக்கியமாக வாழ முன் வர வேண்டும்.

Leave a Comment