பெண்களுக்கு மாதம் ரூ.1,000 /- அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்..?? - Tamil Crowd (Health Care)

பெண்களுக்கு மாதம் ரூ.1,000 /- அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்..??

 பெண்களுக்கு மாதம் ரூ.1,000 /- அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்..??

பெண்களுக்கான மாத உரிமைத்தொகை குறித்து திமுக அமைச்சர் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார்.

திமுக தேர்தல் அறிக்கையை நிறைவேற்றவில்லை என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. குறிப்பாக நீட் தேர்வு ரத்து, சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.100 மானியம், மாதம் ஒரு முறை மின் கட்டணம் செலுத்தும் முறை, மகளிருக்கு உரிமைத் தொகை மாதம் ரூ.1000, முதியோர் ஓய்வூதியம் ரூ.1500 ஆகியவற்றை குறிப்பிடுகின்றன.

அதிலும், மகளிருக்கு ரூ.1000 உரிமைத் தொகை திட்டம் எப்போது கொண்டு வருவார்கள் என்ற எதிர்பார்ப்பு பெருமளவில் எழுந்துள்ளது. திமுக ஆட்சியில் இருக்கும் வரை இந்த திட்டம் மாதாமாதம் நடைமுறையில் இருக்கும் என்பதால் பெருமளவு நிதி தேவைப்படும்.

இந்நிலையில் இந்த வாக்குறுதியை முன்னிறுத்தி திமுக பல இடங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் பரப்புரை செய்து வருகிறது. பரப்புரையில் ஈடுப்பட்ட திமுக அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடந்த அதிமுக ஆட்சியில் அரசின் கஜானாவை காலி செய்துவிட்டனர், இதனால் இந்த ஆட்சிக்கு அது பெரும் நிதிச்சுமையை ஏற்படுத்தியுள்ளது என தெரிவித்தார்.

அதை சரிசெய்யும் பணியை முதல்வர் செய்து வருகிறார். அதனால் தான் பெண்களின் உரிமைத்தொகை திட்டம் தாமதமாகிறது என்று அவர் கூறினார். இந்த திட்டம் ஓரிரு மாதங்கள் மட்டுமே என்றால் நிறைவேற்றிவிடலாம். ஆனால், காலத்துக்கும் கொடுக்கப்பட வேண்டும் என்பதால் தாமதமாகிறது என்று விளக்கம் அளித்தார்.

இத்திட்டத்திற்கான கணக்கெடுப்பு நடந்து வருகிறது என்று தெரிவித்த அமைச்சர் இன்னும் மூன்று மாதங்களில் மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படும் என கூறினார்.

Leave a Comment