புதிய வகை கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து-கரோனா தடுப்பூசி செலுத்துவதை பரவலாக்க கோரிக்கை.
புதிய வகை கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து 60 வயதுக்குட்பட்டவர்களுக்கும் கரோனா தடுப்பூசி செலுத்த பஞ்சாப் முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.
நாடு முழுவதும் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக பஞ்சாப், மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா பரவல் விகிதம் மீண்டும் உயர்ந்துள்ளது.
இந்நிலையில் கரோனா தடுப்பூசி செலுத்துவதை பரவலாக்க வேண்டும் என பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார். செவ்வாய்க்கிழமை பேசிய அவர், “நாட்டில் கரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கருத்தில் கொண்டு கரோனா தடுப்பூசி செலுத்துவதை அனைத்து தரப்பினருக்கும் பரவலாக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
பஞ்சாபில் அதிகரிக்கும் கரோனா தொற்று பரவலை சுட்டிக்காட்டி பேசிய அமரீந்தர் சிங் மக்கள் கரோனா நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
பஞ்சாபில் திங்கள்கிழமை நிலவரப்படி 2299 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.