பிறை தெரியாததால் நாளை ரமலான் நோன்பு தொடக்கம்!
நாளை முதல் ரமலான் நோன்பு கடைபிடிக்கப்படும் என தமிழக தலைமை காஜி சலாவுதீன் முகமது ஆயூப் வலியுறுத்தியுள்ளார்.
இந்த செய்தியையும் படிங்க…
கொரோனாவால் உலகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால், வழிபாட்டுத் தலங்களில் வழிபட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. விழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ரமலான் மாதத்திற்கான பிறை இன்று தென்படாததால் ஏப்ரல் 14 ஆம் தேதி இரவு முதல் ரமலான் நோன்பு தொடங்கும் என தமிழக அரசின் தலைமை காஜி அறிவித்துள்ளார். இஸ்லாமியர்கள் மசூதிக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என தமிழக தலைமை காஜி சலாவுதீன் முகமது ஆயூப் கேட்டுக் கொண்டுள்ளார். நோய் பரவல் தடுப்பதை தடுக்க இஸ்லாமியர்கள் வீடுகளில் இருந்தபடி தொழுகை நடத்த வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.