பிறந்து 15 நாளேயான குழந்தை கரோனாவுக்கு பலி..!! - Tamil Crowd (Health Care)

பிறந்து 15 நாளேயான குழந்தை கரோனாவுக்கு பலி..!!

 பிறந்து 15 நாளேயான குழந்தை கரோனாவுக்கு பலி..!!

குஜராத்தில் பிறந்து 15 நாளேயான குழந்தை கரோனாவுக்கு பலியான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

குஜராத் மாநிலம், சூரத்தில் உள்ள மருத்துவமனையில் கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி பிறந்த குழந்தைக்கு தாய் மூலம் கரோனா பரவியது. இதையடுத்து கரோனாவால் பாதிக்கப்பட்ட தாய் வேறொரு மருத்துமனைக்கு சிகிச்சைக்காக மாற்றப்பட்டார்.

இந்த செய்தியையும் படிங்க…

 கரோனா வைரஸ் தொற்றின்- புதிய அறிகுறிகள்..!! 

அதேசமயம் கரோனா பாதித்த குழந்தைக்கு வென்டிலேட்டர் உதவியுடன் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும், ஒருகட்டத்தில் குழந்தையின் உடல்நிலை மிக மோசமடைந்தது. இதைதொடர்ந்து அந்த குழந்தைக்கு ரெம்டெசிவிர் ஊசி செலுத்தப்பட்டது.

ஆனால் அந்த குழந்தை சிகிச்சை பலனின்றி நேற்றிரவு இறந்தது. இந்த சம்பவம் குஜராத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment