பிரதமர் மோடி, கொரோனா தொற்றை தடுக்க மக்களிடம்- நான்கு அம்ச கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்..!!
கொரோனா பரவலை கட்டுப்படுத்த ‘தடுப்பூசி திருவிழா’ இன்று நாடு முழுவதும் தொடங்கியுள்ளதாக கூறிய பிரதமர் மோடி, கொரோனா தொற்றை தடுக்க மக்களிடம் நான்கு அம்ச கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.
இந்த செய்தியையும் படிங்க…
தமிழகத்தில் புதிய உச்சம் தொடும் கொரோனா..!! |
இது குறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிந்தது:
‘கொரோனா பரவலை கட்டுப்படுத்த ‘தடுப்பூசி திருவிழா’ இன்று நாடு முழுவதும் தொடங்கியுள்ளது. நான் உங்களிடம் நான்கு கோரிக்கைகளை முன்வைக்கிறேன்.
அவையாவன:-
- தடுப்பூசி கிடைப்பதற்கான வசதிகள் இல்லாதவர்களுக்கு மருந்து கிடைக்க உதவ வேண்டும்.
- தடுப்பூசி குறித்த புரிதல் இல்லாதவர்களுக்கும், வயதானவர்களுக்கும் மருந்து எடுத்துக்கொள்வதற்கான முக்கியத்துவத்தை உணர்த்தி, தடுப்பூசி கிடைக்க வழிவகை செய்தல் வேண்டும்.
- ஒருவருக்கு தொற்று உறுதியானால் அந்தப்பகுதியை மைக்ரோ கட்டுப்பாட்டு மண்டலமாக உருவாக்கவேண்டும்.
- முகக்கவசம் அணிய வேண்டும். பிறரை முகக்கவசம் அணிய ஊக்குவிக்க வேண்டும்.”
முன்னதாக கடந்த வியாழக்கிழமை மாநில முதல்வர்களுடன் உரையாடிய பிரதமர், இந்த தடுப்பூசி நடவடிக்கை குறித்து பேசினார். “மாநில முதல்வர்கள் விமர்சனங்களை எதிர்கொள்ள கற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் அதே நேரம் மக்களுக்கு தடுப்பூசி போடும் பணியை தொடர்வதோடு கொரோனா பரிசோதனைகளையும் அதிகப்படுத்த வேண்டும்’ என்றார்.