பிரச்சாரங்களில் கொரோனா விதிமுறைகளை உறுதி செய்ய தேர்தல் ஆணையத்திற்கு- நீதிபதிகள் உத்தரவு .
தமிழகத்தில் கட்டுக்குள் இருந்த கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மீண்டும் பொதுமுடுக்கம் வருமோ என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர். ஆனால் மக்கள் முகக்கவசம் அணியாதது தான் தீவிரமாக பரவுவதற்கு காரணம் என சுகாதாரத்துறை செயலர் கூறுகிறார்.
அதேநேரத்தில் தற்போது தேர்தல் காலம் என்பதால் பரப்புரை கூட்டங்களில் மக்கள் கூட்டம் கூட்டமாக நிற்கின்றனர். இதனால் கொரோனா பரவுமா என்ற அச்சம் எழுந்துள்ள.
இந்நிலையில், வழக்கறிஞர் தொண்டன் சுப்ரமணி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். அதில் தேர்தல் பரப்புரை மற்றும் வாக்குப்பதிவின்போது கொரோனா விதிமுறைகளை முறையாக பின்பற்ற தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணையின்போது, கொரோனா இரண்டாம் அலை போன்று பரவ தொடங்கியிருப்பதாகவும், நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் வேட்பாளர்களும் அரசியல் கட்சிகளும் பொறுப்பாக் செயல்படவேண்டும் என நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
மேலும் கொரோனா தடுப்பு விதிகள் குறித்து வாக்காளர்களுக்கு வேட்பாளர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும் எனவும் அறிவுத்தினர்.
அதேபோல் மக்கள் கூடுகிற தேர்தல் நாளன்றும் கொரோனா விதிமுறைகளை மக்கள் பின்பற்றுவதை முறையாக உறுதி செய்யவேண்டும் எனவும், இதுகுறித்த விளம்பரங்களை வெளியிட வேண்டும் எனவும் தேர்தல் ஆணையத்துக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.