பஸ் ஓட்டுநர்கள், நடத்துநர்களுக்கு தடுப்பூசி கட்டாயம் – போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குநர்..!!
பேருந்துகளில் பணியாற்றும் டிரைவர், கண்டக்டர்கள் தடுப்பூசி கட்டாயம் போடவேண்டும்- என போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குநர் சுற்றறிக்கை.
இந்த செய்தியையும் படிங்க…
(IOB)இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் அருமையான வேலைவாய்ப்பு-தேர்வு இல்லை..!!
சென்னை மாநகர பேருந்துகளில் பணியாற்றும் ஓட்டுநர்கள், நடத்துநர்களுக்கு கொரோனா தடுப்பூசி கட்டாயம் என போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். 33 போக்குவரத்துக்கழக பணிமனை மேலாளர்களுக்கு மேலாண் இயக்குநர் (பொறுப்பு) இளங்கோவன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
பொதுமக்களுடன் தொடர்பில் இருப்பதால் 45 வயதிற்கு மேற்பட்ட ஊழியர்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். சிறப்பு விடுப்பு அளிக்காத சூழல் இருப்பதால் முறையாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுங்கள் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.