பழைய 100 ரூபாய் நோட்டுக்கள் செல்லாதா? ரிசர்வ் வங்கி விளக்கம்
பழைய 5 ரூபாய், 10 ரூபாய் மற்றும் 100 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறப்போவதாக வெளியான செய்தியை ரிசர்வ் வங்கி மறுத்துள்ளது.
கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் மாதம் 8ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி , ரூ.1000 மற்றும் ரூ.500 நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்தார். அதற்கு பதில் புதிதாக 2000 ரூபாய் நோட்டுக்கள் மற்றும் ரூ.500 நோட்டுக்கள் வெளியிடப்பட்டன.
இதனிடையே கடந்த 2018ம் ஆண்டு ரூ.10, ரூ.50, ரூ.200 நோட்டுக்கள் அறிமுகம் செய்யப்பட்டு புழக்கத்திற்கு வந்தன அதன்பிறகு 2019ல் புதிய ஊதா நிற 100 ரூபாய் நோட்டுக்கள் வந்தன. தொடர்ந்து 20 ரூபாய் மற்றும் 50 ரூபாய் புதிய நோட்டுக்களும் புழக்கத்திற்கு வந்தன.
இந்நிலையில் பழைய ரூ.5, ரூ.10 மற்றும் ரூ.500 நோட்டுக்களை வாபஸ் பெற ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியானது.
இது குறித்து ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது. இதன்படி ” வரும் மார்ச் அல்லது ஏப்ரல் முதல் பழைய ரூ.5, 10 மற்றும் 100 ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெற ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளதாக வெளியான செய்திகள் தவறானது. ரிசர்வ் வங்கி வெளியிட்ட முந்தைய சீரியல் எண் கொண்ட அனைத்து ரூ.100 நோட்டுகளும் செல்லுபடியாகும்” என்று கூறப்பட்டுள்ளது.