பள்ளிகளில் 30 மாணவருக்கு ஒரு ஆசிரியர் என்கிற அளவில் அமல்படுத்தப்படும் ”- அமைச்சர் தகவல்..!!
ஜூலை 1- திருச்சி எடமலைப் பட்டிப் புதூரில் உள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
”அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவ- மாணவிகளைத் தக்க வைத்துக் கொள்ளும் வகையில் அரசுப் பள்ளிகளின் உட்கட்ட மைப்புகளை மேம்படுத்துவது, ஆசிரியர்கள் பற்றாக்குறையைக் களைய நடவடிக்கை எடுப்பது உட்பட பல்வேறு அம்சங்கள் குறித்து அரசுப் பள்ளிகளில் நேரில் ஆய்வு செய்து வருகிறேன்.
இந்த செய்தியையும் படிங்க…
Breaking:அரசு ஊழியர்கள் புதிய மருத்துவ காப்பீடு திட்டம் – இன்று முதல் அமல்..!!
ஆய்வின் அடிப்படையில் தயாரிக்கப்படும் அறிக்கையை முதல் அமைச்சர் மு.க.ஸ்டா லின் தலைமையில் ஜூலை 1ஆம் தேதி நடைபெறும் பள்ளிக் கல்வித்துறை ஆய்வுக் கூட்டத்தில் அளிக்க உள்ளேன் . அரசுப் பள்ளிகளுக்குத் தேவையான அனைத்தும் முதல்வரின் கவனத் துக்கு எடுத்துச் சென்று நிறைவேற்றப்படும் .
தற்போது கல்வித் தொலைக் காட்சிக்கு ஒரு அலைவரிசை மட்டுமே உள்ள நிலையில் ,
மழலையர் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை ,
6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை ,
9 மற்றும் 10 ஆம் வகுப்பு ,
பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2
என 4 அலைவரிசைகள் தொடங்குவது குறித்து ஆலோ சனை நடத்தி வருகிறோம் .
பள்ளிகளில் 30 மாணவருக்கு ஒரு ஆசிரியர் என்கிற அளவில் அமல்படுத்தப்படும் ”.
இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
இந்த செய்தியையும் படிங்க…
JULY 1 முதல் : அரசு ஊழியர்களுக்கான காப்பீடு கட்டணம் ரூ.300 ஆக உயர்வு..!!