பல்ஸ் ஆக்சி மீட்டரை Oximeter பயன்படுத்துவது எப்படி..?? - Tamil Crowd (Health Care)

பல்ஸ் ஆக்சி மீட்டரை Oximeter பயன்படுத்துவது எப்படி..??

 பல்ஸ் ஆக்சி மீட்டரை Oximeter பயன்படுத்துவது எப்படி..??

பல்ஸ் ஆக்சி மீட்டரை  Oximeter பயன்படுத்துவது எப்படி? என்று தமிழக சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களுக்கு ஆக்சிஜன் Oxygen அளவு மிகவும் குறைகிறது.

இந்த செய்தியையும் படிங்க…. குழந்தைகளை பாதிக்கும்- புதிய கொரோனா வைரஸ் திரிபு ..!!

 இதனால், ஆக்சிஜன்  Oxygen அளவை கண்டுபிடிக்க பல்ஸ் ஆக்சி மீட்டரை  Oximeter நிறைய பேர் பயன்படுத்துகின்றனர். பல்ஸ் ஆக்சி மீட்டரை Oximeter பயன்படுத்தும் முறை குறித்து 

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு:

*  10 நிமிடம் நிதானமாக அமர்ந்த பின் உங்கள் ஆக்சிஜன் (Oxygen) அளவை சரிபாக்கவும்

* கருவியை பயன்படுத்துவதற்கு முன் விரல்களை கிருமி நாசினியால் நன்றாக சுத்தம் செய்யவும்.

* ஆள்காட்டி விரல் அல்லது நடுவிரலில் கருவியை பொருத்தவும்.

* கருவியில் தெரியும் ஆக்சிஜன்Oxygen  அளவும், நாடி துடிப்பும் சீராக தெரியும் வரை காத்திருக்கவும்.

* சில விநாடிகளுக்கு பிறகு ஆக்சிஜன் Oxygen அளவையும், நாடி துடிப்பையும் குறித்து கொள்ளவும்.

* விரல்களில் மருதாணி, நகபூச்சு, ஈரம் மற்றும் குழுமை ஆக்சிஜன் அளவை தவறாக காட்ட கூடும்.

* ஆக்சிஜன்  Oxygen அளவு 94% கீழ் இருந்தால் மற்ற கையில் உள்ள விரல்களில் பார்க்கவும்.

* தொடர்ந்து 94% கீழ் இருந்தால் மருத்துவ உதவியை நாடவும். மேலும் மருத்துவ உதவிக்கு இலவச சேவை உதவி மையத்தை 104ல் அணுகலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Comment