பல்கலைகள், மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதில், முக்கிய பங்காற்ற வேண்டும்-கவர்னர் அறிவுரை..!! - Tamil Crowd (Health Care)

பல்கலைகள், மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதில், முக்கிய பங்காற்ற வேண்டும்-கவர்னர் அறிவுரை..!!

 பல்கலைகள், மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதில், முக்கிய பங்காற்ற வேண்டும்-கவர்னர் அறிவுரை..!!

கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்; துணைவேந்தர்களுக்கு கவர்னர் அறிவுரை:

‘மாணவர்கள் உதவியுடன், சமூகத்தில் கொரோனா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்’ என, பல்கலை துணைவேந்தர்களை, கவர்னர் பன்வாரிலால் புரோஹித் அறிவுறுத்தியுள்ளார்.தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித், நேற்று பல்கலை துணைவேந்தர்களுடன், ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக கலந்துரையாடினார். இதில், 21 பல்கலைகளின் துணைவேந்தர்கள் பங்கேற்றனர்.

இந்த செய்தியையும் படிங்க…

2 நாட்கள் முழு ஊரடங்கு – அதிரடி அறிவிப்பு !! 

அப்போது, கவர்னர் பேசியதாவது:

 சமூகத்தில் கொரோனா குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தப்ப, மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், தடுப்பூசியின் அவசியம் குறித்து, மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். இப்பணியில், மாணவர்கள் உதவியுடன், பல்கலைகள் முக்கிய பங்காற்ற வேண்டும்.

  1. அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். 
  2. அடிக்கடி கைகளை கிருமி நாசினியால், சுத்தம் செய்ய வேண்டும். 
  3. சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். இதை பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.
  4. ஆன்லைன் வகுப்புகளில், மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படாமல் இருக்க, எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை எடுத்துரைக்க வேண்டும்.
  5. அதை மாணவர்கள் பின்பற்றுவதுடன், அவர்கள் குடும்பத்தினர் மற்றும் அருகில் உள்ளவர்களுக்கு தெரியப்படுத்தும்படி கூற வேண்டும். 
  6. அப்போது தான், கொரோனாவுக்கு எதிராக, சமூகம் வெற்றிகரமாக போராடும்.
  7.  பல்கலைகள் அனைத்தும், மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதில், முக்கிய பங்காற்ற வேண்டும். 

இவ்வாறு, பன்வாரிலால் புரோஹித் பேசினார்.

Leave a Comment