பருவத்தேர்வுகள் ரத்து: பாரதியார் பல்கலை அறிவிப்பு..!! - Tamil Crowd (Health Care)

பருவத்தேர்வுகள் ரத்து: பாரதியார் பல்கலை அறிவிப்பு..!!

 பருவத்தேர்வுகள் ரத்து: பாரதியார் பல்கலை அறிவிப்பு..!!

கொரோனா பரவல் காரணமாக கல்லுாரிகள் மூடப்பட்டு, ஆன்லைன் மூலம் தேர்வுகள் நடத்த அறிவுறுத்தப்பட்டது. இதன்படி, பாரதியார் பல்கலையின் கீழ் புதிய சாப்ட்வேர் வடிவமைக்கப்பட்டு, மே 3ம் தேதி தேர்வுகள் நடக்கும் என தெரிவிக்கப்பட்டது. 

இந்த செய்தியையும் படிங்க…

 மாதம் ரூ.75000/- ஊதியத்தில் தெற்கு ரயில்வேயில் வேலைவாய்ப்பு-உடனே விண்ணப்பியுங்கள்..!! 

நிர்வாக காரணங்களால், 10ம் தேதிக்கு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது. தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசு 24ம் தேதி வரை முழு ஊரடங்கை அறிவித்துள்ளது. இதனால், தேர்வுகள் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

 துவங்கவிருந்த பருவத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாகவும், புதிய தேர்வு அட்டவணை பின்னர் தெரிவிக்கப்படும் எனவும் வெளியாகியுள்ளது. 

இந்த செய்தியையும் படிங்க…

 சென்னை பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு : விண்ணப்பிக்க கடைசி நாள் இதுதான்..!!

கல்லுாரி முதல்வர்களுக்கும், இதுகுறித்த சுற்றறிக்கையை அனுப்பி, மாணவர்கள் அனைவருக்கும் தகவலை கொண்டு சேர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Comment