பயிர் கடன் தள்ளுபடியில் விடுபட்ட விவசாயிகள்: கால நீட்டிப்பு -வழங்க அமைச்சரிடம் வலியுறுத்தல்..!!
அதில் கூறியிருப்பதாவது:
கூட்டுறவு சங்கங்களில் Jan., 31 வரை உழவர்கள் பெற்ற பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டதாக கடந்த Feb., 5ல் தமிழக அரசு அறிவித்தது. கடந்த Dec., கூட்டுறவு சங்க செயலாளர்கள், உழவர்களை தொடர்பு கொண்டு பயிர் கடன்களை செலுத்துமாறும், கடனை திரும்ப செலுத்தியதும் இரண்டொரு நாளில் மீண்டும் மறுபயிர் கடன் வழங்கப்படும் என தெரிவித்தனர்.
இந்த செய்தியும் படிங்க…
SSY(செல்வமகள் சேமிப்பு திட்டம்): கணக்கு தொடங்குவது எப்படி.? என்னென்ன பயன்கள்..??
அவர்களது வலியுறுத்தலால் பல உழவர்கள் பிற இடங்களில் கடன் பெற்று, பயிர் கடனை திரும்ப செலுத்தினர். ஆனால் மறுகடன் வழங்கவில்லை. கடன் தொகையை குறைக்க கூட்டுறவு துறை அதிகாரிகள், இதுபோல நடந்து கொண்டனர். கடனை கட்டிய அனைத்து உழவர்களும், கூட்டுறவு சங்கங்களை மட்டுமே நம்பி பயிர் செய்யும் சிறு, குறு உழவர்கள். கடனை செலுத்திய உழவர்கள் போராட்டத்துக்கு பின் மறுகடன் வழங்கப்பட்டது.
கூட்டுறவு கடன் தள்ளுபடியில் பயன்பெறும் வகையில், இறுதியாக கடன் பெற்ற தேதியை Feb., 28 என நீடிக்க வேண்டும். விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி சான்று வழங்கி, மீண்டும் கடன் கிடைக்க உத்தரவிட வேண்டும். கடந்த, AIADMK., ஆட்சியில் சிறு, குறு உழவர்களுக்கு மட்டும் கடன் தள்ளுபடி செய்துவிட்டு, ஐந்து ஏக்கருக்கு மேல் நிலம் உள்ளவர்களை பெரிய உழவராக பிரித்ததை, உயர் நீதிமன்ற வழிகாட்டுதல்படி சேர்த்து பயன் பெற வழி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.