பயன் தரும் மருத்துவக் கட்டுரைகள்- தாய்ப்பால் வங்கி
குறிப்பு:
- முன்னுரை
- தாய்ப்பாலின் மகத்துவம்
- குறைமாத குழந்தைகள், குறை எடை குழந்தைகள்
- காரணங்கள்
- தாய்ப் பாலின் மகிமை
- தாய்ப்பால் வங்கியில் பாதுகாத்து வைத்தல்
- தாய்ப்பாலின் அவசியம்
- தாய்ப்பால் வங்கியில் சேமிப்பு
- முடிவுரை
முன்னுரை:
” தாயினும் சிறந்ததொரு கோயிலும் இல்லை” என்பது முதுமொழி .”தாய்ப்பாலின் சிறந்த பாலும் இல்லை” என்பது புதுமொழி.
தாய்ப்பாலின் மகத்துவம்:
- இது கிருமிகள் அற்றது.
- குழந்தைக்கு எளிதில் கிடைக்கக்கூடியது .
- குழந்தையின் தேவைக்கு தகுந்த அளவு கிடைக்கக்கூடியது.
- சக்தி நிறைந்தது.
- குழந்தைகளின் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்க கூடியது.
- எவ்வித சூழ்நிலையிலும் குழந்தைக்கு கிடைக்கக்கூடியது.
- குழந்தைகளின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கக் கூடியது .
குறைமாத குழந்தைகள், குறை எடை குழந்தைகள் :
வளரும் நாடான நம் இந்தியாவில் குறைமாத குழந்தைகளும், குறை குழந்தைகளும் அதிக அளவில் பிறக்கின்றனர்.
காரணங்கள்:
அதற்கு பல காரணங்கள் இருக்கின்றன .
- தாய்மார்களின் ஊட்டச்சத்து குறைவு.
- தாய்மார்களின் உடல் ரீதியான பிரச்சனை இருதய, சிறுநீரக, நுரையீரல் நோய்கள்.
- கர்ப்பப்பையின் வளர்ச்சியின்மை, கர்ப்பப்பை கட்டிகள், தாய்மார்களுக்கு கர்ப்ப கால தொற்று நோய்கள் போன்றவை .
- இத்தகைய குறைமாதக் குழந்தைகளுக்கு இந்த தாய்ப்பால் வங்கிகளின் பால் ஒரு வரப்பிரசாதம் என்று சொல்வதைவிட வாழ்வின் அச்சாரம் எனலாம்.
இவ்வாறு நோய்வாய்ப்பட்ட குழந்தைகளுக்கு தாய்ப்பால் தொடர்ந்து அளித்தால் அவர்கள் நலமுடன் ஆரோக்கியமாக வாழ்வார்கள் மற்றும் வளர்வார்கள்.
தாய்ப் பாலின் மகிமை:
தாய்ப்பாலில் இருக்கும் கொழுப்பு அமிலங்கள் மூளை வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகின்றன .நீண்ட நாட்களுக்கு தாய்ப்பால் புகட்ட குழந்தைகள் அதிக அளவில் மதிப்பெண்கள் வாங்கும் திறன் புலப்பட்டது. இதற்கு சான்றாக ,நியூசிலாந்து நகரில் 1977ஆம் ஆண்டு பிறந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட தாய்ப்பால் மட்டுமே குடித்த குழந்தைகளை அவர்களின் 18 வயதில் பரிசோதித்து பார்த்தபோது அவர்கள் பள்ளிகளில் உயர் மதிப்பெண்கள் பெறுவதோடு, கணக்கு மற்றும் வாசிக்கும் தேர்வுகளிலும் சிறந்து விளங்குகின்றனர் என்று ஆய்வு முடிவு கூறுகிறது.
தாய்ப்பால் வங்கியில் பாதுகாத்து வைத்தல்:
சாதாரணமாக ஒரு தாயின் பாலை பீச்சி எடுத்து வைத்திருந்தால் அது 24 மணி நேரத்திற்குள் கெட்டுப்போகும் .ஆனால், தாய்ப்பால் வங்கியில் முறையாக பாதுகாத்து வைத்தால் அது ஆறு மாதங்கள் வரையும் கெட்டுப்போகாது .
தாய்ப்பாலின் அவசியம்:
பிரசவமான முதல் நான்கு நாட்களுக்குள் பீச்சி எடுத்து பாதுகாக்கப்படும் சீம்பாலை வயிற்றுப்போக்கு நோயால் பாதிக்கப்படும் குழந்தைகள், ஊட்டச்சத்து குறைந்த குழந்தைகள் ,தீக்காயங்களால் துன்புறும் குழந்தைகளுக்கு, கொடுத்தால் குழந்தைகள் வேகமாக குணமடைவார்கள்.
நோய்வாய் பட்டிருக்கும் குறைமாத குழந்தைகளுக்கு தாய்ப்பால் அவசியம் .
அவ்வாறு தாய்ப்பால் கொடுக்கப்படும் குழந்தைகளை மருத்துவமனையில் இருந்து விரைவில் வீட்டிற்கு அனுப்பி விடலாம் .
ஆனால், சேர்க்கை பால் குடிக்கும் குறைமாத குழந்தைகள் அவ்வளவு விரைவாக வீட்டிற்கு அனுப்ப முடியாது.
தாய்ப்பால் வங்கியில் சேமிப்பு:
தாய்ப்பால் குழந்தையின் தாயிடமிருந்து கிடைக்காவிடில் தாய்ப்பால் வங்கியில் இருந்து கொடுக்கலாம்.
தாய்ப்பால் வங்கியில் தாய்மார்களிடம் இருந்து மிகுதியான பாலினை பீச்சி அதனை 56 சென்டிகிரேட் வெப்பத்தில் பதப்படுத்தி 20 டிகிரி சென்டிகிரேட் வெப்பத்தில் ஆல் உரை குளிர்சாதனப் பெட்டியில் பாதுகாப்பாக வைக்கப் பட வேண்டும்.
இவ்வாறு பதப்படுத்தி வைக்கப்பட்ட பாலில் ஏதேனும் வைரஸ் கிருமிகள் இருந்தாலும் இறந்துவிடும்.
அதேசமயம் அப்பாலில் எதிர்ப்பு சக்தி எதுவும் குறையாது.
மேலைநாடுகளில் மருத்துவமனை நிர்வாகத்தினர் தாய்ப்பாலை தானமாக கொடுக்கும் தாய்மார்களின் வீடு தேடி சென்று பாலினை பிச்சி தருமாறு கேட்டு வாங்கிக் கொள்வர்.
அல்லது தாய்மார்களே பல்பொருள் விற்பனை நிலையங்களில் பாலினை எடுத்து கொடுத்து விட்டு போய் விடுவார்கள் .
அதனை மருத்துவமனை நிர்வாகத்தினர் வந்து பெற்றுக் கொள்வர் .
முடிவுரை:
இத்தகைய தாய்ப்பால் வங்கி ஒவ்வொரு மாவட்டம் தோறும் ஏன் ஒவ்வொரு கிராமம் தோறும் ஏற்படுத்திய விழிப்புணர்வு ஏற்படுத்துதல் அவசியம். அதோடு இத்தகைய தாய்ப்பால் வங்கி நடத்தும் மருத்துவமனைகள் முன் வருதல் அவசியம்.