பத்திரப்பதிவில் முறைகேடு..? முறைகேட்டில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை ..!! - Tamil Crowd (Health Care)

பத்திரப்பதிவில் முறைகேடு..? முறைகேட்டில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை ..!!

பத்திரப்பதிவில் முறைகேடு..? முறைகேட்டில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை ..!!

முழு ஊரடங்கால் மூடப்பட்டிருந்த பத்திரப்பதிவு அலுவலகங்கள் JUNE 7(2021) முதல் மீண்டும் செயல்படத் தொடங்கின. தினமும் 50 சதவீத டோக்கன் வழங்கி பத்திரப்பதிவு பணிகளை மேற்கொள்ள அரசு அனுமதி வழங்கியுள்ளது. கூட்டம் சேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் பத்திரப்பதிவுக்கு தாக்கல் செய்பவர் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும், பத்திரப்பதிவு கட்டணத்தை செலுத்த POINT OF SALE கருவியை பயன்படுத்தலாம் என்றும் தெரிவித்துள்ளது.

இந்த செய்தியையும் படிங்க…

 வீடுகளுக்கான துல்லியமான மின்கட்டணத்தை கணக்கிட்டு செலுத்துவது எப்படி?… மின்வாரியத்துறை விளக்கம்..!!  

அதன் படி, அரசின் விதிமுறைகளை கடைபிடித்து பத்திரப்பதிவு அலுவலகங்கள் இயங்குகின்றன. இந்த நிலையில், மதுரை தெற்குவாசல் பகுதியில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் அமைச்சர் பி.மூர்த்தி ஆய்வு மேற்கொண்டார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பி மூர்த்தி, இடைத்தரகர் இல்லாமல் உரிய கட்டணம் பெற்று பத்திரப்பதிவு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. முறைகேட்டில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மக்கள் புகார் அளிக்க விரைவில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும், பத்திரப்பதிவு அலுவலகங்களில் முறைகேடு நடந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் புகார் தெரிவிக்கப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

Leave a Comment