நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும்- திணை உணவுகள்..!! - Tamil Crowd (Health Care)

நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும்- திணை உணவுகள்..!!

 திணை உணவுகள்- பயன் என்ன:ஏன் அவசியம் சாப்பிட வேண்டும்?..!!

நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும்- திணை உணவுகள்

 இந்தியாவைப் பொறுத்தவரை காலம் காலமாக திணை வகை உணவுகளை சாப்பிடுவது வழக்கமாக இருந்தது. தவறான விளம்பரங்கள் மற்றும் மேற்கத்திய உணவுகள் மீதான மோகம் காரணமாக திணை உணவுகளின் பயன்பாடு உணவு முறையில் முற்றிலும் விலக்கப்பட்டது. பாலிஸ் செய்யப்பட்ட அரிசிகள், மைதாவை அதிகம் உபயோகப்படுத்துவது அதிகரித்தது.

இந்த செய்தியையும் படிங்க…

Quarantine Diet : தனிமைபடுத்தப்பட்டோர் தவிர்க்க வேண்டிய உணவுகள் -என்னென்ன.?? 

திணை உணவுகளை ஏழை, எளிய மக்கள் சாப்பிடுவது என்ற பார்வையும் பரவலாக இருந்தது. ஆனால், கொரோனா வைரஸ் பரவலுக்குப் பிறகு அனைத்து தரப்பினரின் உணவு பழக்கமும் மாறியிருக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக திணை உணவுகளை அன்றாட டயட்டில் சேர்க்கத் தொடங்கியிருக்கின்றனர்.

பண்டையகால உணவு

  1. கம்பு, கேழ்வரகு, சாமை, குதிரைவாலி, சோளம், வரகு, திணை போன்ற உணவுகள் மட்டுமே பண்டைய காலங்களில் உணவாக முன்னோர்கள் சாப்பிட்டனர். 
  2. நார்ச்சத்து, ஊட்டச்சத்து, வைட்டமின்கள், புரதம், தாதுக்கள், ஆக்ஸிஜனேற்றிகள் என அனைத்தும் இந்த திணை உணவுகளில் நிறைந்திருக்கின்றன. 
  3. கால்சியம், மக்னீசியம், தியாமின் போன்ற உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களின் மூலமாக இருந்த உணவுகள் காலப்போக்கில் காணாமல்  போயின. 
  4. இதனை அன்றாட உணவில் சேர்த்துக்கொண்டால், உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைப்பதுடன்,நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது.

திணை உணவுகளின் பயன்:

பெரும்பாலான திணைப்பயிர்கள் இந்திய நிலப்பரப்பைச் சார்ந்தது. நம் காலநிலைக்கு ஏற்ப விளையும் பயிர்கள். திணைகள் வளருவதற்கு பூச்சிக்கொல்லி போன்ற ரசாயன மருந்துகளின் தேவை இருக்காது. இயற்கை முறையில் வளரும் இந்த பயிர்கள் சீதோஷண நிலைக்கு ஏற்ற உணவாகவும் இருக்கின்றன. 

உணவு ஒவ்வாமையை ஏற்படுத்தாது:

  • திணை உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ளும்போது ட்ரைகிளிசரைடுகள், சி ரியாக்டிவ் புரதத்தைக் குறைத்து இதய நோய் ஏற்படாமல் தடுக்கின்றன.
  •  நார்சத்து அதிகம் இருப்பதால், குடல் அழற்சியை நோய் ஏற்படாலும் பாதுகாக்கின்றன.

ஏன் அவசியம் சாப்பிட வேண்டும்?

  •  திணை வகைகளில் கிளட்டன் இல்லை.
  • அதிக ஊட்டசத்து மற்றும் நார்சத்து மிக்கவையாக உள்ளன. 
  • கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ் போன்ற ஊட்டச்சத்துகள் ரத்தத்தில் சர்க்கரையை அதிகரிக்கும் கிளைசெமிக்கை குறைவாகவும் கொண்டிருக்கின்றன. 
  • அன்றாட உணவில் சாப்பிடுவதால் டைப் 2 நீரிழிவு நோயில் இருந்து பாதுகாக்கப்படுவதுடன், ரத்த அழுத்தத்தை குறைக்கிறது. 
  • வாயு தொல்லை ஏற்படாது. 
  • அல்சர் மற்றும் கலன் புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது.

தானியத்தில் இருக்கும் ஊட்டசத்துகளின் அளவு:

  1. புரோட்டீன் 7-12%, 
  2. கொழுப்பு 2-5%,
  3.  கார்போஹைட்ரேட்ஸ் 65-75%, 
  4. நார்ச்சத்து 15-20%
இந்த செய்தியையும் படிங்க…

மத்திய அரசின் பங்கு:

திணை வகை உணவுகளை மத்திய அரசு பெருமளவு ஊக்குவித்து வருகிறது. 2018ம் ஆண்டை திணை ஆண்டாக மத்திய அரசு கடைபிடித்தது. இந்தியாவின் தொடர் முயற்சியால் திணை உணவுகளின் முக்கியத்துவத்தை உணர்ந்த ஐ.நா மன்றம்(UNO) 2023 ஆம் ஆண்டை திணை ஆண்டாக அறிவித்துள்ளது. இதன் மூலம் உலகளவில் திணைகளின் உபயோகத்தை அதிகரிக்க முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. இந்திய அளவிலும் இதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

Leave a Comment