நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் காய்கறி சூப் செய்வது எப்படி..? - Tamil Crowd (Health Care)

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் காய்கறி சூப் செய்வது எப்படி..?

 நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் காய்கறி சூப் செய்வது எப்படி..?

கொரோனா சயமத்தில் பலரும் ஆரோக்கியமான வீட்டு உணவில் அக்கறை செலுத்தி வருகின்றனர். எதை சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம் என தேடி வருகின்றனர். அந்த வகையில் இந்த சூப் உங்களுக்கு உதவலாம்.

இந்த செய்தியையும் படிங்க…

ஒரு நாள் ஊதியத்தை விட்டுக் கொடுத்த- அரசு ஊழியர்கள்..!! 

 ‘இந்த சூப் சைவ உணவுப் பிரியர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மிகவும் உதவியாக இருக்கும். இதை வீட்டில் முயற்சி செய்யுங்கள். எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் அடங்கியது’ .

இந்த சூப் அதிகபட்சம் வீட்டில் நாம் பயன்படுத்தக் கூடிய காய்கறிகளைக் கொண்டே செய்யப்படுவது என்பதால் எளிதில் செய்யலாம். எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

வெங்காயம் – 1

இஞ்சி துண்டு – சிறிதளவு

பூண்டு – 5-6

மிளகு – 7-8

பிரிஞ்சு இலை – 1

துளசி – 1 கொத்து

ரோஸ்மெரி – 1 கொத்து

பீன்ஸ் – 1 கப்

கேரட் – 1/2 கப்

புரக்கோலி – 1/2 கப்

காலிஃப்ளவர் – 1/2 கப்

கொத்தமல்லி – 2 கொத்து

தக்காளி – 1

தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை :

ஒரு பாத்திரத்தில் வெங்காயம், இஞ்சி, பூண்டு , மிளகு, பிரிஞ்சு இலை சேருங்கள்.

பின் துளசி, ரோஸ்மெரி, கொத்தமல்லி ஆகியவற்றை சேருங்கள்.

அடுத்ததாக காய்கறிகளை நறுக்கி சேர்த்துக்கொள்ளுங்கள்.

தற்போது தண்ணீர் ஊற்றி ஒரு மணி நேரத்திற்கு நன்கு கொதிக்கவிடுங்கள்.

இந்த செய்தியையும் படிங்க…

 இந்திய ரயில்வேயில் வேலை வேண்டுமா..?

நன்கு கொதித்து அதன் ஊட்டச்சத்துக்கள் தண்ணீர் உறிஞ்சிவிடும். தண்ணீரும் கொதித்து சுருங்கிய பதத்தில் இருக்கும். அப்போது அடுப்பை அணைத்துவிடுங்கள்.

அவ்வளவுதான் சூப் தயார். இதில் மிளகுத்தூள் சேர்த்து சாப்பிடலாம் அல்லது அப்படியேவும் குடிக்கலாம்.

Leave a Comment