நெஞ்செரிச்சல், வயிற்றுக்கோளாறை குணமாக்க வேண்டுமா..?? - Tamil Crowd (Health Care)

நெஞ்செரிச்சல், வயிற்றுக்கோளாறை குணமாக்க வேண்டுமா..??

 நெஞ்செரிச்சல், வயிற்றுக்கோளாறை குணமாக்க வேண்டுமா..?? இந்த சூப்பரான டீ மட்டுமே போதும்..!!

வயிற்றில் சுரக்கும் அமிலமானது உணவுக்குழாயில் திரும்ப மேல் நோக்கி வருவதால் ஏற்படக்கூடியதுதான் நெஞ்செரிச்சல்.

இது, சில உடல் உபாதைகளுக்கான ஓர் அறிகுறி. எனவே, நெஞ்செரிச்சலை நிராகரிக்காமல், உடனுக்குடன் தீர்வு காண்பது நல்லது.

இந்த செய்தியையும் படிங்க…

 இந்திய ரயில்வேயில் வேலை வேண்டுமா..?

அந்தவகையில் இதனை குணமாக்கும் சூப்பரான டீ ஒன்றை எப்படி செய்வது என பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

  • கொத்தமல்லி விதை – 100 கிராம்
  • ஏலக்காய் – 2
  • பனஞ்சர்க்கரை அல்லது கருப்பட்டி – 2 டீஸ்பூன்
  • பால் – அரை டம்ளர்

செய்முறை

தனியாவை வெறும் வாணலியில் வறுத்து, ஆறிய பின் பொடித்து கொள்ளவும். பாலை கொதிக்க வைத்து கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க ஆரம்பித்ததும் ஒரு டீஸ்பூன் தனியா பொடியைச் சேர்த்துக் கொதிக்கவிடவும்.

நன்றாக கொதித்து வரும் போது ஏலக்காய் தட்டிச் சேர்த்து, நன்கு கொதித்ததும் இறக்கி பால், பனஞ்சர்க்கரை அல்லது கருப்பட்டி சேர்த்துப் பருகவும்.

இந்த டீயை பால் ஊற்றாமல் குடித்தால் மிகவும் நல்லது.

Leave a Comment