நுரையீரல், உணவுக்குழாய், வயிறு பகுதிகளுக்கும் வெல்லம் நன்மைகளை அளிக்கிறது..!!
கரும்புச்சாறிலிருந்து தயாரிக்கப்படும் வெல்லத்தில் சத்துகள் அழிக்கப்படுவதில்லை .பனை மரத்திலிருந்து எடுக்கப்படும் பதனீரைக் காய்ச்சுவதன் மூலம் கருப்பட்டி என்ற வெல்லம் தயாரிக்கப்படுகிறது. இது பனைவெல்லம், கருப்பட்டி என்று அழைக்கப்படுகிறது.
வெல்லத்தைப் போன்று சுவை கொடுக்கும் சர்க்கரையும் கரும்பில் இருந்து தயாரிக்கப்படுகிறது என்றாலும் சர்க்கரை பதத்துக்கு அதிக கெமிக்கல்கள் சேர்க்கப்படுகிறது. அப்படி சேர்க்கப்படும் போது கரும்பில் இருக்கும் சத்துகள் முற்றிலும் அழிந்து விடுகிறது என்கிறார்கள்.
இந்த செய்தியையும் படிங்க…
வெல்லத்தில் வைட்டமின் சி(Vit C) மற்றும் இரும்புச்சத்து(Iron) அதிக அளவில் இருக்கிறது. 10 கிராம் வெல்லத்தில் 16 கிராம் மெக்னீசியம்(Magnesium) உள்ளது. துத்தநாகம், செலினியம் போன்றவை உண்டு.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் இருந்து நமது நுரையீரலை சுத்தப்படுத்துவது வரை, வெல்லம் பல்வேறு உடல் ஆரோக்கிய நன்மைகளை அளிக்கிறது.
அதுமட்டுமின்றி இதனை வெதுவெதுப்பான நீருடன் கலந்து குடிப்பதனால் உடலுக்கு பல நன்மைகளை அள்ளித்தருகின்றது.
அந்தவகையில் வெதுவெதுப்பான தண்ணீருடன் வெல்லம் கலப்பதனால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.
நன்மைகள் என்னென்ன.?
வெதுவெதுப்பான நீரில் ஒரு தேக்கரண்டி வெல்லம் தூள் கலந்து, எலுமிச்சை சாறு சேர்த்ததும் சுவையான வைட்டமின் சி(Vit. C) அடங்கிய பானம் தயார்.
- காலையில் சூடான வெல்லத் தண்ணீரைக் குடிப்பது உங்கள் வயிற்று புண்களை ஆற்றவும் நச்சுகளை வெளியேற்றவும், செரிமானத்தை மேம்படுத்தவும் உதவும். நோய்த்தொற்றுக்கு எதிரான சக்தியை அதிகரிக்கும்.
- இதன் அமிலத்தன்மை, மலச்சிக்கல் மற்றும் பிற செரிமான பிரச்சினைகளை நீக்க உதவுகிறது.
- இது உடல் வெப்பநிலையை உறுதிப்படுத்த உதவுகிறது. இரத்த நாளங்களை தளர்வாக்க உதவுகிறது. இது உடலில் வெப்பத்தை உருவாக்குகிறது. உடலில் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது.உடலில் நச்சுத்தன்மையை நீக்க உதவுகிறது.
- வெல்லத்தில் உள்ள தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். அதோடு பருவகால காய்ச்சலிலிருந்து மீள உதவும் என்று கூறப்படுகிறது.
- உடலில் அதிக நீர் இருப்பது எடை அதிகரிப்பதற்கு வழிவகுக்கும். வெல்லத்தில் உள்ள பொட்டாசியம்(Potassium) உடலில் எலக்ட்ரோலைட்(electrolyte) சமநிலையை நிர்வகிக்க உதவுகிறது. இதனால், உடலில் இருக்கும் அதிக நீரை குறைக்கிறது. இது எடை இழப்புக்கு மேலும் உதவுகிறது.
- வெல்லத்தில் அதிகம் நிறைந்திருக்கும் இரும்புச்சத்து(Iron) இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது. இதில் இருக்கும் அதிகப்படியான பொட்டாசியம்(Potassium), சோடியம்(Sodium) அளவு உடலில் இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
- வெல்லம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களைப் பிரித்து வேலை செய்யும் கல்லீரலை சுத்தம் செய்வதோடு பாதுகாப்பாகவும் வைக்க உதவுகிறது. மேலும் நுரையீரல், உணவுக்குழாய், வயிறு பகுதியையும் வெல்லம் சுத்தம் செய்கிறது.