நுரையீரலில் புகுந்த கொரானா, -இதயத்தை பாதிக்காமலிருக்க உஷார்..!!
“சைட்டோகைன் “:
கொரானாவால் நுரையீரல் பலவீனமடையும் போது சுவாச செயலிழப்பு ஏற்படும் .மற்றும் நோய்த்தொற்று நோயெதிர்ப்பு மண்டலத்தை தாக்குவதால் இதயத்தில் “சைட்டோகைன் “ஏற்படும்.
சைட்டோகைன்கலால் இதய சேதத்திற்கு வழிவகுக்கும்,” என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இந்த செய்தியையும் படிங்க…
வெள்ளை பூஞ்சை உடலில் எந்த பகுதியை பாதிக்கும் ..?? கருப்பு பூஞ்சை விட இது ஆபத்தானதா..??
மயோர்கார்டிடிஸ்:
இது நிகழும்போது, ஒரு நோயாளி மயோர்கார்டிடிஸ் எனப்படும் ஆபத்தான நிலையை அனுபவிக்கக்கூடும் என்று டெக்சாஸ் ஹெல்த் ஃபோர்ட் வொர்த் மற்றும் டெக்சாஸ் ஹெல்த் ஃபீசியன்ஸ் குழுமத்தின் இருதயநோய் நிபுணர் டாக்டர் ஸ்ரீனிவாஸ் குடிமெட்லா விளக்குகிறார்.
“மயோர்கார்டிடிஸ் என்பது இதய தசையின் வீக்கம். இது இதய தசையின் பம்ப் செயல்பாட்டை பலவீனமாக்கும் .
‘அச்சப் பதற்ற நோய்’:
மேலும் கொரோனா வந்து உடலால் பாதிக்கப்பட்டவர்களைவிட மனத்தால் பாதிக்கப்பட்டவர்கள்தான் அதிகம். அது மனித மனங்களில் அச்சத்தை விதைத்தது. என்னாகுமோ, ஏதாகுமோ என்ற பதற்றத்தை ஏற்படுத்தியது. ‘அச்சப் பதற்ற நோய்’ எனும் மனநோயைக் கொண்டுவந்தது. அது புதிதாகப் பலருடைய இதயங்களைத் தாக்கியது. ஏற்கனவே பாதிப்பைக் கண்டிருந்த இதயங்களை மோசமாக்கியது.
இதயநோய், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மிகை கொலஸ்ட்ரால், சிறுநீரகப் பிரச்சினை, புற்றுநோய் போன்றவற்றுடன் இருந்த நோயாளிகள் மாதாமாதம் அல்லது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மேற்கொள்ள வேண்டிய ஆய்வகப் பரிசோதனைகள் விடுபட்டுப்போயின.
மாரடைப்பு:
அதன் விளைவாக, அவர்கள் உடலில் உண்டான அசாதாரண மாற்றங்களைக் காலத்தோடு கவனிக்க முடியாமல் போனது. தோராயமான சிகிச்சைகளே சாத்தியமாயின. இந்த நிலைமை பல மாதங்களுக்கு நீடித்ததால், ஏற்கனவே இருந்த இணை நோய்கள் தீவிரமடைந்தன. அவை கொடுத்த அழுத்தத்தில் மாரடைப்பு வருவதற்கான சாத்தியம் 20 சதவீதம் அதிகரித்தது.
இந்த செய்தியையும் படிங்க…
வாழைத்தண்டு – மருந்தாக விளங்கும் நோய்கள் :என்னென்ன தெரியுமா..??
மனச்சோர்வு:
கரோனா காலத்தில் பலருக்குத் தனிமைச் சூழல் மனநலத்தைக் கெடுத்தது; மனச்சோர்வைக் கொடுத்தது. அதேநேரம், மற்ற சிகிச்சைகளுக்கு அவர்கள் எடுத்த முன்னெடுப்புகளைவிட மனநல மீட்புக்கு எடுத்துக்கொண்ட முயற்சிகள் மிகக் குறைவு. அப்படியே முயற்சித்தாலும், ‘தொலை மருத்துவத்’தில்தான் (Tele medicine) சிகிச்சை பெற முடிந்தது. மனநலப் பாதிப்புகளுக்கு நேரடி மருத்துவ ஆலோசனைகள் கொடுத்த நற்பலன்கள், தொலை மருத்துவத்தில் கிடைக்கவில்லை. இதுவும் இதயத்தைப் பாதிக்கக் காரணமானது.