நாட்டில் முதன்முதலாக 34வயது நபருக்கு ‘பச்சை பூஞ்சை’ வைரஸ் பாதிப்பு..!!
மத்தியப் பிரதேசம் மாநிலம் இந்தூரில் 34 வயதான ஒரு நபருக்கு, நாட்டிலேயே முதன்முறையாக ‘பச்சை பூஞ்சை வைரஸ்’ தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
நாட்டில் முதன்முதலாக மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் 34 வயதான நோயாளி ஒருவருக்கு ‘பசுமை பூஞ்சை’ தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ’34 வயதான கொரோனா நோயாளி கடந்த ஒன்றரை மாதமாக இந்தூரின் அரவிந்தோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்தச் செய்தியையும் படிங்க…
CORONA : தடுப்பூசி கட்டாயம் தேவையா..??தடுப்பூசியின் பயன் தான் என்ன?
அவருக்கு 90 சதவீதம் நுரையீரல் தொற்று இருந்தது. தற்போதைய நோயறிதல் பரிசோதனையின் போது அவருக்கு நுரையீரலில் பச்சை பூஞ்சை வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இது நாட்டின் முதல் பச்சை பூஞ்சை வைரஸ் தொற்றாகும் ‘ என்று இந்தூ ர் மாவட்ட சுகாதாரத் துறையின் மேலாளர் அபூர்வா திவாரி கூறினார்.
பச்சை பூஞ்சை வைரஸ் தொற்று பாதிப்பினை உறுதி செய்தபின்பு திங்களன்று விமானம் மூலமாக அந்த நோயாளி மும்பை இந்துஜா மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்