நாடு தழுவிய ஆயுஷ் கோவிட் AYUSH COVID-19 ஆலோசனை: HELP LINE NO: -14443 தொடக்கம்..!! - Tamil Crowd (Health Care)

நாடு தழுவிய ஆயுஷ் கோவிட் AYUSH COVID-19 ஆலோசனை: HELP LINE NO: -14443 தொடக்கம்..!!

 நாடு தழுவிய ஆயுஷ் கோவிட் AYUSH COVID-19 ஆலோசனை: HELP  LINE NO: -14443 தொடக்கம்..!!

மத்திய ஆயுஷ் அமைச்சகம் (MINISTRY OF AYUSH), கோவிட் -19 தொடர்பான பிரச்சனைகளுக்கு, ஆயுஷ் அடிப்படையிலான அணுகுமுறைகளையும், தீர்வுகளையும் வழங்குவதற்காக, பிரத்யேக ஹெல்ப்லைன் HELP LINE  NO (எண் 14443) ஒன்றைத் தொடங்கியுள்ளது.

இந்த செய்தியையும் படிங்க…

 எலும்புகள் மற்றும் கர்ப்பபை வலுப்பெற – கருப்பட்டி..!!  

கட்டணமில்லா இந்தத் தொலைபேசி ஹெல்ப்லைன் எண் (help line no) 14443, இந்தியா முழுவதும் காலை 6 மணி முதல் நள்ளிரவு 12 வரை, வாரத்தின் ஏழு நாட்களும், செயல்படும்.

இந்த ஹெல்ப்லைன் மூலம், ஆயுர்வேதம்AYURVEDA, ஹோமியோபதி(HOMEOPATHY), யோகா(YOGA), இயற்கை மருத்துவம்(NATUROPATHY), யுனானிUNANI, சித்தா SIDDHA ஆகிய பல்வேறு துறைகளைச் சேர்ந்த வல்லுநர்கள் பொது மக்களின் கேள்விகளுக்கு தீர்வு சொல்வார்கள்.

 இந்த வல்லுநர்கள், நோயாளிகளுக்கு ஆலோசனைகளையும், தீர்வுகளை வழங்குவதோடு மட்டுமல்லாமல் அருகிலுள்ள ஆயுஷ்(AYUSH) வசதிகள் குறித்தும் அவர்களுக்கு வழிகாட்டுவார்கள்.

கொவிட் தொற்றுக்கு COVID, மறுவாழ்வு மற்றும் மேலாண்மை அணுகுமுறைகளையும் நிபுணர்கள் பரிந்துரைப்பார்கள். ஹெல்ப்லைன் ஐ.வி.ஆர்(IVR) (இன்டராக்டிவ் வாய்ஸ் ரெஸ்பான்ஸ்) முறையில் செயல்படுகிறது. தற்போது இந்தியிலும்(Hindi), ஆங்கிலத்திலும்(English) ஆலோசனை வழங்கப்படுகிறது. விரைவில், பிற மொழிகளிலும் கிடைக்கும்.

இந்த செய்தியையும் படிங்க…

 சோம்பு(Fennel Seeds), பெருஞ்சீரகம்- பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்..!!  

ஹெல்ப்லைனில் HELP LINE, ஒரே நேரத்தில் 100 அழைப்புகளை எடுக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. தேவைகளுக்கு ஏற்ப எதிர்காலத்தில் திறன் அதிகரிக்கப்படவுள்ளது. ஸ்டெப்ஒன் STEP ONE என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் உதவியுடன், ஆயுஷ் (MINISTRY OF AYUSH) அமைச்சகம் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது.

Leave a Comment