நந்திகிராமில் வெல்வாரா- மம்தா பானர்ஜி..??- பெரும் எதிர்பார்ப்பு..!!
முதல்வர் மம்தா பானர்ஜி தற்போது பவானிபூரில் எம்எல்ஏவாக இருந்து வருகிறார். கடந்த 2 முறையும் அந்தத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மம்தா பானர்ஜி இந்த முறை நந்திகிராம் தொகுதியிலிருந்து போட்டியிடுகிறார்.
இந்த செய்தியையும் படிங்க……
மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் : மம்தா பேனர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி- முன்னிலை!!
இதனால், நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜிக்கு சுவேந்து அதிகாரி கடும் சவாலாக இருக்கிறார்.
நந்திகிராம் தொகுதி கிழக்கு மித்னாபூர் மாவட்டத்துக்குட்பட்டது. நந்திகிராமில் சுவேந்து அதிகாரிக்கான செல்வாக்கு வலுவானது. நந்திகிராமில் திரிணமூலுக்கு வலுவான இடத்தைப் பெற்றுத் தந்ததில் சுவேந்து அதிகாரியின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது.
தனது மக்கள் செல்வாக்கை ஆதாரமாகக் கொண்டே, நந்திகிராமில் குறைந்தது 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலாவது மம்தாவை வீழ்த்துவேன் என சுவேந்து அதிகாரி சவால் விட்டுள்ளார். அதுமட்டுமின்றி மிட்னாபூர் எப்போதுமே மண்ணின் மைந்தனையே தேர்வு செய்யும் எனவும் சுவேந்து அதிகாரி கூறியுள்ளார்.
சுவேந்து அதிகாரி கட்சிக்கு துரோகம் செய்து விட்டு பாஜகவுக்கு தாவி விட்டார், அவருக்கு வாக்களித்த மக்களையும் அவர் முதுகில் குத்தி விட்டார் என மம்தா பானர்ஜி பிரச்சாரம் செய்தார்.
இந்த செய்தியையும் படிங்க……
அசாம் தேர்தல் நிலவரம்: பாஜக முன்னிலை..!!
இதனால் நந்திகிராம் நட்சத்திர தொகுதி என்பதை விடவும் பரபரப்பான தொகுதியாக மாறியுள்ளது. இருதரப்பினரும் இந்த தொகுதியை கைபற்ற தீவிர முயற்சியில் செய்தனர். இதனால் இந்த தொகுதியின் வாக்கு எண்ணிக்கை பரபரப்பாக எதிர்பார்க்கப்படுகிறது.