தொழிற்கல்வி பயிலும் மாணவா்களுக்கு உதவித்தொகை: விழிப்புணா்வு ஏற்படுத்த கல்லூரிகளுக்கு உத்தரவு..!!
தொழிற்கல்வி பட்டப்படிப்பு மாணவா்களுக்கு, முதல்வரின் நிவாரண நிதியில் உதவித் தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் குறைந்துள்ளதால், அது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்துமாறு கல்லூரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இது தொடா்பாக அனைத்து கல்லூரிகளுக்கும் உயா் கல்வித்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
தொழிற்கல்வியான BE., B.Tech., MBBS., LLB உள்ளிட்ட படிப்புகளை படிக்கும் மாணவா்களில், ஏழைக் குடும்பத்தை சேர்ந்தவா்களில், ஆண்டுக்கு 200 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, முதல்வரின் நிவாரண நிதியின் கீழ் உதவித் தொகை வழங்கப்படுகிறது. இந்தத் திட்டம் 18 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது.
இந்த செய்தியையும் படிங்க..
முதல் பட்டதாரி- முதல் தலைமுறை பட்டதாரி என மாற்றம்-அமைச்சர் சிவசங்கர்..!!
இந்தத் திட்டத்தில், ஒவ்வொரு மாணவருக்கும் படிக்கும் காலத்தில், ஒரு முறை மட்டும் தலா ரூ.50,000 உதவித் தொகை வழங்கப்படும். பயன் பெற விரும்பும் மாணவா்கள், மாவட்ட ஆட்சியா்களிடம் விண்ணப்பங்களை அளிக்க வேண்டும். அங்கிருந்து விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, முதல்வரின் தனிப்பிரிவுக்கு அனுப்பப்படும். அவை சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பப்பட்டு நிதி உதவி வழங்கப்படும்.
தற்போது தொழிற்கல்வி படிப்புகளில், ஒற்றைச் சாளர முறையில் சேர்க்கை பெறும் மாணவா்கள் அதிகரித்து வரும் நிலையில், முதல்வரின் நிவாரண நிதியில் உதவி கேட்கும் மாணவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வருவது குறைவாக உள்ளது. எனவே, மாணவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தி, மாவட்ட ஆட்சியா் அலுவலகங்களில் உரிய விண்ணப்பங்களைப் பெற்று, முதல்வரின் தனிப்பிரிவுக்கு அனுப்ப வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.