அனைத்துப் பட்ட மேற்படிப்புகள் இந்திய மொழிகளில் நடத்தப்பட வேண்டும்: வெங்கைய்யா நாயுடு
அனைத்துப் பட்டபடிப்பு மேற்படிப்புகளும் இந்திய மொழிகளில் நடத்தப்பட வேண்டும் என துணை குடியரசுத் தலைவர் வெங்கைய்யா நாயுடு விருப்பம் தெரிவித்துள்ளார்.
இந்திய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு இரண்டு நாள் சுற்றுப்பயணமாக இன்று காலை ரேணிகுண்டா விமான நிலையத்துக்கு சிறப்பு விமானம் மூலம் வந்தடைந்தார். திருப்பதியில் உள்ள ஐஐடி ஆறாம் ஆண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய வெங்கைய்யா நாயுடு, தொடக்கப் பள்ளியிலிருந்து மேல்நிலைப்பள்ளி வரை மாணவர்கள் கண்டிப்பாக தாய்மொழியில் பாடம் கற்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
மருத்துவம், தொழில்நுட்பம், அறிவியல் போன்ற அனைத்து பட்ட மேற்படிப்புகளும் இந்திய மொழியில் கற்பிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். கடந்த ஆறு ஆண்டுகளில் திருப்பதி ஐஐடி பெரும் வளர்ச்சி கண்டிருப்பதாகவும் வெங்கைய்யா நாயுடு பெருமிதம் தெரிவித்தார்.