தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான ஆங்கில பயிற்சி – முதன்மை கல்வி அலுவலர் அறிக்கை! - Tamil Crowd (Health Care)

தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான ஆங்கில பயிற்சி – முதன்மை கல்வி அலுவலர் அறிக்கை!

தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான ஆங்கில பயிற்சி – முதன்மை கல்வி அலுவலர் அறிக்கை!
The Regional Institute of English South India (RIESI) அமைப்பு மூலம் தமிழகத்தில் உள்ள தொடக்கப்பள்ளி ஆங்கில ஆசிரியர்களுக்கு பெங்களூரில் 15.02.2021 முதல் 16.03.2021 வரை ஆங்கில மொழிப்பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த பயிற்சிக்கு விண்ணப்பிக்க 29.01.2021 கடைசி தேதி ஆகும்.
தமிழகத்தில் உள்ள தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில மொழி திறமையை வளர்க்க RIESI – பெங்களூரு அமைப்பு சார்பில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு ஆங்கில மொழிப்பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சி பெங்களூருவில் 15.02.2021 முதல் 16.03.2021 வரை நடத்தப்படுகிறது. இந்த பயிற்சிக்கு தமிழக தொடக்கப்பள்ளிகளில் உள்ள ஆங்கில ஆசிரியர்கள் ஒரு மாவட்டத்திற்கு ஒரு ஆசிரியர் என தேர்வு செய்து அனுப்பி வைக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் RIESI பெங்களூரு அமைப்பிலிருந்து அனுப்பப்பட்ட கடிதத்துடன் சம்மந்தப்பட்ட ஆசிரியர்களின் விருப்ப கடிதத்தை இணைத்து அதிகாரபூர்வ விண்ணப்பத்தை பூர்த்தி செய்து deeselection.exmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 29.01.2021 தேதிக்குள் அனுப்ப வேண்டும் என முதன்மை கல்வி அலுவலர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

Leave a Comment