தேர்தல்- வெற்றிக் கொண்டாட்டத்திற்கு தடை..!! - Tamil Crowd (Health Care)

தேர்தல்- வெற்றிக் கொண்டாட்டத்திற்கு தடை..!!

 தேர்தல்- வெற்றிக் கொண்டாட்டத்திற்கு தடை..!!

கொரோனா தொற்று பரவல் தீவிரமாகி வருவதை அடுத்து, ஐந்து மாநில சட்டசபை தேர்தல் ஓட்டு எண்ணிக்கை முடிந்த பின், வெற்றி பெறும் கட்சியினர், கொண்டாட்டங்களில் ஈடுபட, தலைமை தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. ஓட்டு எண்ணிக்கை நாளன்று, முழு ஊரடங்கை அமல்படுத்துவது குறித்தும், தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம் ஆகிய நான்கு மாநிலங்களுக்கு, சட்டசபை தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன. 

இந்த செய்தியையும் படிங்க…

மே 15 வரை ரத்து- சற்றுமுன் வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு..!! 

மேற்கு வங்கத்திற்கு மட்டும், நாளை கடைசியாக, எட்டாம் கட்ட ஓட்டுப்பதிவு நடக்கிறது. இந்த ஐந்து மாநில சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுகள், மே 2ல் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.தற்போது, கொரோனா தொற்று பரவலின் இரண்டாவது அலை, நாடு முழுதும் தீவிரமடைந்துள்ள நிலையில், ஓட்டு எண்ணும் மையங்களில், கொரோனா தடுப்பு விதிமுறைகளை கடுமையாக பின்பற்ற, தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

‘ஓட்டு எண்ணும் மையத்திற்கு வரும் அரசு ஊழியர்கள், வேட்பாளர்கள், அவர்களது முகவர்கள் அனைவரும், கொரோனா பரிசோதனையை கட்டாயம் மேற்கொண்டு, ‘நெகட்டிவ்’ என, சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் அல்லது ஒரு, ‘டோஸ்’ தடுப்பூசியாவது போட்டிருக்க வேண்டும்’ என, தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.

தவறிவிட்டதுஇந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற அமர்வு, தேர்தல் ஆணையத்துக்கு, நேற்று முன்தினம் கடுமையான எச்சரிக்கை விடுத்தது; அப்போது நீதிபதிகள் உத்தரவிட்டதாவது: தேர்தல் பிரசாரங்களின் போது, கொரோனா தடுப்பு விதிமுறைகளை முறையாக பின்பற்ற, தேர்தல் ஆணையம் தவறிவிட்டது. இரண்டாவது அலை உருவாக, தேர்தல் ஆணையத்தின் பொறுப்பற்ற செயலே காரணம். 

தேர்தல் ஆணைய அதிகாரிகள் மீது, கொலை வழக்கு பதிவு செய்ய முடியும். வரும், 2ம் தேதி, ஓட்டு எண்ணும் மையங்களில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முறையாக பின்பற்றப்படவில்லை என நீதிமன்றம் கருதினால், ஓட்டு எண்ணிக்கையை நிறுத்த நேரிடும்.

ஓட்டு எண்ணிக்கையின் போது பின்பற்றப்படவுள்ள கொரோனா தடுப்பு விதிமுறைகள் குறித்த விபரமான அறிக்கையை, வரும் 30ம் தேதி, நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.மேலும், ஓட்டு எண்ணிக்கையை முன்னிட்டு, மே 1, 2ம் தேதிகளில், முழு ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து, தமிழகம் மற்றும் புதுச்சேரி அரசுகள் பரிசீலிக்கலாம். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

வரவேற்புஇதையடுத்து, ஓட்டு எண்ணிக்கையின் போது, கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளை கண்டிப்புடன் பின்பற்ற, தலைமை தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.இதன்படி, மே 2ம் தேதி ஓட்டு எண்ணிக்கை முடிந்த பின், வெற்றி பெறும் அரசியல் கட்சியினர், கூட்டம் கூடி கொண்டாட்டங்களில் ஈடுபடவும், வெற்றி ஊர்வலம் நடத்தவும், தலைமை தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

வெற்றி பெற்ற வேட்பாளர், சான்றிதழ் பெற வரும்போது, அவருடன் இருவர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு, ஐந்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைய உத்தரவு குறித்து, 

பா.ஜ., தேசிய தலைவர், ஜே.பி.நட்டா கூறியதாவது:

தேர்தல் ஆணையத்தின் உத்தரவை மனதார வரவேற்கிறேன். இந்த உத்தரவை கண்டிப்புடன் பின்பற்றும்படி, கட்சியின் அனைத்து மாநில பொறுப்பாளர்களுக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.ஊரடங்கு குறித்து ஆலோசனை!தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு, செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: ஏற்கனவே திட்டமிட்டபடி, மே 2ல் ஓட்டு எண்ணிக்கை நடக்கும்; ஓட்டு எண்ணிக்கையை தள்ளி வைக்க வாய்ப்பில்லை. தேர்தல் வெற்றி கொண்டாட்டத்துக்கு தடை உட்பட, தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள விதிமுறைகளை, முறையாக கடைப்பிடிக்கும்படி, அரசியல் கட்சி பிரமுகர்களுக்கு அறிவுறுத்தப்படும்.

சென்னை உயர் நீதிமன்ற பரிந்துரைப்படி, ஓட்டு எண்ணிக்கை நாளான, மே 2ல், முழு ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து, தமிழக அரசு மற்றும் சுகாதாரத் துறையினருடன் ஆலோசனை நடந்து வருகிறது.ஓட்டு எண்ணிக்கை மையத்தில், துணை ராணுவப்படை பாதுகாப்பில் ஈடுபடுத்தப்படாது.

இந்த செய்தியையும் படிங்க…

வரும் சனி, ஞாயிறு- 2 நாட்களும் முழு ஊரடங்கா..?? 

ஏற்கனவே பாதுகாப்பில் உள்ளவர்கள் பணியை தொடர்வர். சட்டம் – ஒழுங்கு பாதுகாப்பு பணியில், காவல் உயர் அதிகாரிகள் தலைமையில், தனிப்படை செயல்படும். ஓட்டு எண்ணும் மையத்திற்குள், அடையாள அட்டை வைத்திருப்போர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். பிற நபர்கள் உள்ளே நுழைய அனுமதி கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment