தேர்தல் போஸ்டர்களால் அலங்கோலமாக மாறிவிட்டது – அரசு பள்ளியை சீரமைக்க வேண்டும்..!!
தேர்தல் போஸ்டர்களால் அலங்கோலமாக மாறிவிட்டது – வாக்குச்சாவடி மையமாக செயல்பட்ட அரசு பள்ளியை சீரமைக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை.
இந்த செய்தியையும் படிங்க…
தமிழகத்தை 3 மாநிலங்களாக பிரிக்க திட்டம்..!பா.மா.க தலைவரின் யோசனை…!
காஞ்சிபுரம் அடுத்த திருப்புட்குழி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, தனியார் பள்ளிகளை மிஞ்சும் அளவுக்கு தகவல் தொழில்நுட்பம் உள்பட அனைத்து துறை களிலும் சிறந்து விளங்கியது. இந்தப் பள்ளியில் அனைத்து வகுப்புகளிலும் கல்வித்திறன், கற்றல் மேம்பாட்டுக்காக பொது அறிவுத் தகவல்கள், தலைவர்களின் பொன் மொழிகள் மற்றும் தமிழ் விளக்கத்துடன் ஆங்கில தேர்தல் அறிவி! தொடக்கப் பள்ளி வார்த்தைகள் எழுதப்பட்டு இருந்தது.
மேலும் மாணவர்கள் குழுவாக கற்கும் வகையில் ஒவ்வொரு குழுவுக்கும். கணினி மற்றும் கற்றல் உபகரணங்கள் தனித்தனியாக அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. இந்நிலையில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்காக இப்பள்ளியில் 8 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டன.
இதனால், பள்ளி வளாகத்தின் பெரும்பாலான பகுதிளில் போஸ்டர்களில் தேர்தல் தொடர்பான அறிவிப்பு நோட்டீஸ்கள் ஒட்டப்பட்டன. அருகிலேயே உயர்நிலைப் பள்ளி இருந்தும் பொதுமக்கள், பள்ளி ஆசிரியர்கள் விடுத்த வேண்டுகோளை நிராகரித்து இந்தப் பள்ளியில் வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டது.
கிராமப்புற மாணவர்கள், தனியார் பள்ளி மாணவர்களை மிஞ்சும் அளவில் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் சீர்குலைந்துள்ள திருப்புட்குழி ஊராட்சி ஒன்றிய பள்ளி ஆசிரியர்கள், பொதுமக்கள் மற்றும் சில தன்னார்வலர்கள் ஒன்றிணைந்து இப்பள்ளியை மேம்படுத்தினர்.
இந்த செய்தியையும் படிங்க…
(IOB)இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் அருமையான வேலைவாய்ப்பு-தேர்வு இல்லை..!!