தேர்தல் பணி விலக்கு கோரும் ஆசிரியர்கள் உரிய ஆவணங்களுடன் அணுகலாம்- முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு
தேர்தல் பணியில் இருந்து விலக்கு கோரும் ஆசிரியர்கள் முதன்மை கல்வி அலுவலரிடம் உரிய ஆவணங்களுடன் கடிதம் வழங்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் அரசு பணியாளர்கள் பட்டியல் அந்தந்த துறை அலுவலகங்கள் மூலம் திரட்டப்பட்டது.
தொடர்ந்து துறை சார்ந்த அதிகாரிகள் மூலம் தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் அதற்கான ஒப்புதல் கடிதங்களும் பெறப்பட்டன.
அதே நேரத்தில் தேர்தல் பணியில் இருந்து
- மாற்று திறனாளிகள்,
- பார்வையற்ற மாற்றுதிறனாளிகள்,
- நிறைமாத கர்ப்பிணிகள்,
- நீண்ட கால முதுகு வலி,
- நீரிழிவு,
- ரத்த அழுத்தம்.
உட்பட்ட கடும் நோய்களால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் அலுவலர்களுக்கு தேர்தல் பணியில் இருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் வழிகாட்டலை வழங்கியுள்ளது.