தேர்தல் குறித்து சத்யபிரதா சாகு சில முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார்.
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர் சந்திப்பில் சில முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார்.
இதுவரை 7,255 வேட்பு மனுக்கள் பெறப்பட்டுள்ளன 4,512 வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. 2,743 வேட்பு மனுக்கள் நிராகரிப்பு. மொத்தம் கோடியே 29 லட்சத்து 43 ஆயிரத்து. 512 வாக்காளர்கள் உள்ளனர். ஆண் வாக்காளர்கள்-3 கோடி 9 லட்சத்து 95 ஆயிரத்து 440 பேர். பெண் வாக்காளர்கள்-3 கோடி 19 லட்சத்து 40 ஆயிரத்து 880 பேர். ஆண் வாக்காளர்களைவிட பெண் வாக்காளர்கள் 10 லட்சம் பேர் அதிகம்.
காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை:
வாக்குப்பதிவு நடைபெறும். தமிழக சட்டமன்ற தேர்தல் திட்டமிட்டப்படி நடக்கும். தேர்தல் அட்டவணையில் எந்த மாற்றமும் இல்லை. கொரோனா அதிகரிப்பு குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு விளக்கம்.