தேர்தல் அதிகாரிகளின் இந்த நியாயமான பயத்துக்கு தேர்தல் கமிஷன் என்ன பதில் சொல்லப் போகிறது? - Tamil Crowd (Health Care)

தேர்தல் அதிகாரிகளின் இந்த நியாயமான பயத்துக்கு தேர்தல் கமிஷன் என்ன பதில் சொல்லப் போகிறது?

 தேர்தல் அதிகாரிகளின் இந்த நியாயமான பயத்துக்கு தேர்தல் கமிஷன் என்ன பதில் சொல்லப் போகிறது? 

தமிழகத் தேர்தல் களத்தில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகளுக்கான ஆதரவு அலை ,எதிர்ப்பு அலைகளை விட,  கரோனா இரண்டாவது அலையால் தேர்தல் நடக்குமா ?நடக்காதா? ஊரடங்கு வருமா? வராதா? என்பது தான் இப்போதைய விவாதப் பொருளாக உள்ளது.

 திட்டமிட்டப்படி தேர்தல் நடக்கும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவிக்க அதற்கான பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 6-ஆம் தேதி ஓட்டுப்பதிவு நாளில் கடைசி ஒரு மணி நேரத்தில் அதாவது மாலை ஆறு மணி முதல் ஏழு மணிக்குள் கரோனா நோயாளிகளும் தேர்தல் கமிஷனால் வழங்கப்படும் பாதுகாப்பு கவச உடை யும், கை உறையையும் அணிந்து வந்து ஓட்டு அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 அனைவரும் ஓட்டளிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தேர்தல் கமிஷன் இப்படி அறிவித்திருந்தாலும், ஓட்டு சாவடிகளில் தேர்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகளை பீதியில் ஆழ்த்தியுள்ளது. ஓட்டுப்பதிவு நாளில் கரோனா பற்றாளர்களும் கவச உடை அணிந்து வந்து ஓட்டளிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.

 என்னதான் கவச உடை. கையுறை அணிந்து வந்து ஓட்டு மிஷினை பயன்படுத்தினாலும், அதன் பின் அதிகாரிகள் ஓட்டு மிஷின்களை மூடி சீல் வைக்கும் பணிக்காக அதை முழுமையாக கையாள வேண்டியுள்ளது. அதேபோல் ஓட்டுச் சாவடிக்குள் வரும்  கரோனா பாதிப்புள்ளவர்கள் அங்கு கை வைக்க வாய்ப்புள்ளது. இதனால் ஓட்டுச்சாவடி அதிகாரிகளுக்கு நோய் தொற்று வரலாம். எனவே, கரோனாபாதிப்பு உள்ளவர்களையும் ,ஓட்டுச்சாவடிக்கு வரவழைப்பதற்கு பதில் அவர்களுக்கும் தபால் ஓட்டு வாய்ப்பு வழங்கலாம்.

 ஏற்கனவே முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு இம்முறை வழங்கப்பட்டுள்ளதால்  கரோனாபாதிப்பு உள்ளவர்களையும் தபால் ஓட்டு வாய்ப்பு  வழங்குவதில் எந்த பாதிப்பும் இருக்கப்போவதில்லை. ஆனால், இதையும் மீறி கரோனா நோயாளிகளை ஓட்டுச்சாவடிகளில் அனுமதித்து, அதனால் தேர்தல் பணியில் ஈடுபடும் அதிகாரி  பாதிப்பு ஏற்பட்டால் அதற்கான முழு பொறுப்பையும் அரசு ஏற்க வேண்டும்.

 தேர்தல் அதிகாரிகளின் இந்த நியாயமான பயத்துக்கு தேர்தல் கமிஷன் என்ன பதில் சொல்லப் போகிறது? 

Leave a Comment