தமிழகத்தில் தேர்தலுக்கு 5 நாட்களுக்கு முன் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கப்படும்
தமிழகத்தில் ஏப்ரல் 6 ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து அனைத்து அரசியல் கட்சிகளும் தொகுதி பங்கீடு, கூட்டணிகள், பிரச்சாரங்கள் என பரபரப்பாக இயங்கி வருகிறது. தேர்தல் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஹாரி சத்யபிரத சாகு செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதன்படி ,
- சட்டமன்ற பேரவை பொதுத்தேர்தலுக்கான வாக்காளர் தகவல் சீட்டை, புகைப்பட வாக்காளர் சீட்டிற்கு பதிலாக அனைத்து வாக்காளர்களுக்கும் வழங்க இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
- வாக்காளர் தகவல் சீட்டில் வாக்குச்சாவடி மையம்,
- வாக்குப்பதிவு நாள் மற்றும் நேரம்
ஆகிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. இந்த வாக்காளர் தகவல் சீட்டில் வாக்காளர்களின் புகைப்படம் இடம் பெறாது. வாக்குப்பதிவு நடைபெறும் நாளுக்கு 5 நாட்களுக்கு முன்பே அனைத்து வாக்காளர் தகவல் சீட்டையும் வினியோகிக்க அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.