தேர்தலுக்காக இயக்கப்படும் சிறப்பு பேருந்துகள்: பட்டியல் -முழு விவரம்.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருப்பதால் 1ஆம் தேதி முதல் 5-ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
அந்த சிறப்பு பேருந்துகள் விபரம்:
மாதாவரம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து செல்லும் பேருந்துகள்:
ஆந்திரா மார்க்கமாக செல்லும் பேருந்துகள்.
கே.கே. நகர் பேருந்து நிலையத்திலிருந்து செல்லும் பேருந்துகள்:
ஈ.சி.ஆர். வழியாக புதுச்சேரி கடலூர் மற்றும் சிதம்பரம் செல்லும் பேருந்துகள்.
தாம்பரம் அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து செல்லும் பேருந்துகள்:
கும்பகோணம், தஞ்சாவூர் வழியாக விக்கிரவாண்டி, பண்ருட்டி செல்லும் பேருந்துகள்.
தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிலையத்திலிருந்து செல்லும் பேருந்துகள்:
திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள்.
சேத்துப்பட்டு ,வந்தவாசி, செஞ்சி மார்க்கமாக செல்லும் பேருந்துகள்.
திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம் ,காட்டுமன்னார்கோவில்,
மற்றும் திண்டிவனம் வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள்.
பூந்தமல்லி பேருந்து நிலையத்திலிருந்து செல்லும் பேருந்துகள் :
வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு பஸ் செல்லும் பேருந்துகள்.
திருத்தணி வழியாக திருப்பதி செல்லும் பேருந்துகள்.
கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து செல்லும் பேருந்துகள்:
மேற்குறிப்பிட்டுள்ள ஊர்களைத் தவிர இதர ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள்:
மயிலாடுதுறை ,நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், கன்னியாகுமரி, திருவனந்தபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காரைக்குடி, புதுக்கோட்டை, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், ஈரோடு, ஊட்டி, ராமநாதபுரம், சேலம், கோயம்புத்தூர், மற்றும் பெங்களூர் செல்லும் பேருந்துகள் .
செய்தி வெளியீடு:
செய்தி வெளியீடு எண்: 199
நாள் :23/ 3/ 2021.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கம். போக்குவரத்து துறை செயலாளர் திரு. சி. சமயமூர்த்தி இ.ஆ.ப. அவர்கள்:
தகவல்:
2021 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்களில் 6 நடைபெறும் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பாதுகாப்பான முறையில் சென்று வாக்களிக்க ஏதுவாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கம் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டமானது போக்குவரத்து துறை செயலாளர் திரு. சி. சமயமூர்த்தி இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் இன்று 23/ 3/ 2021. தலைமை செயலகத்தில் காணொளி வாயிலாக நடைபெற்றது.
இக்கூட்டத்தில் காவல்துறை உயர் அலுவலர்கள் மற்றும் தொடர்புடைய துறைகளில் அலுவலர்கள் மற்றும் போக்குவரத்து கழகங்களின் மேலாண் இயக்குனர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் போக்குவரத்து துறை செயலாளர் அவர்கள் தமது தலைமை உரையில் வரும் ஏப்ரல் திங்கள் ஆறாம் நாள் தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் ஊர்களுக்கு பாதுகாப்பான முறையில் பயணம் மேற்கொண்டு வாக்களித்து ஏதுவாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கம் ஆனது இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
வரும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 1-4 -2021 முதல் 5-4 -2021 வரையிலான ஐந்து நாட்களுக்கு சென்னையில் இருந்து தினசரி இயக்கக்கூடிய 2,225 பேருந்துகள், சிறப்பு பேருந்துகள் ஆக 3,090 பேருந்துகள் என ஆக மொத்தம் 14 ,215 பேருந்துகள் சென்னையில் இருந்து இயக்கப்படுகின்றன.
மேலும் கோயம்புத்தூர், திருப்பூர், சேலம் மற்றும் பெங்களூர் ஆகிய இடங்களில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு 2,544 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
மேற்குறிப்பிட்டுள்ள 5 நாட்களில் 1-4- 2021 முதல் 3-4 -2021 வரையில் நாள்தோறும் இயக்கப்படுகின்ற பேருந்துகள் மற்றும் சிறப்பு பேருந்துகள் கோயம்பேடு புரட்சித் தலைவர் டாக்டர். எம்.ஜி.ஆர். பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் .
விடுமுறை நாளான ஞாயிறு 4-4- 2021 மற்றும் திங்கட்கிழமை 5-4- 2021 ஆகிய இரு நாட்களுக்கு மட்டும் இயக்கப்படுகின்ற பேருந்துகள் பண்டிகை நாட்கள் ஆன பொங்கல் மற்றும் தீபாவளி நாட்களில் இயக்கப்பட்டது போன்று பின்வரும் அட்டவணையில் கண்டுள்ள இடங்களிலிருந்து இயக்கப்படுகின்றன.
மேலும் சட்டமன்ற தேர்தல் முடிந்த பிறகு ஊர்களில் இருந்து சென்னைக்கு 6-4- 2021 முதல் 7-4- 2021 வரை தினசரி இயக்கப்படுகின்ற 2,225 பேருந்துகள் உடன் 2,115 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
மேலும் சேலம், மதுரை, திருச்சி ஆகிய இடங்களில் இருந்து திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர், சேலம், திருவண்ணாமலை, வேலூர் ஆகிய இடங்களில் இருந்து பெங்களூர் என மொத்தம் ஆயிரத்து 738 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இயக்கப்படுகின்ற சிறப்பு பேருந்துகள் அனைத்தும் தமிழ்நாடு அரசு விதித்துள்ள நோய் தடுப்பு வழி காட்டு நெறிமுறைகள் ஆன பேருந்துகளை அவ்வப்போது கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்தல், கட்டாய முக கவசம் அணிதல், பயணிகள் உடல் வெப்பநிலையை வெப்பமானி மூலம் பரிசோதனை செய்தல், கிருமிநாசினி மூலம் கைகளை சுத்தம் செய்தல் .உள்ளிட்டவற்றை பின்பற்றியே பேருந்துகள் இயக்கப்படும்.
மேற்கொள்ள பொதுமக்களும் தவறாது பின்பற்றி பாதுகாப்பான பயணத்தை மேற் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
முன்பதிவு வசதி:
சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொள்கிற பொதுமக்கள் கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு இணையதள வசதியான www.tnstc.in, tnstc-official app ஆகியவற்றின் மூலமாக முன்பதிவு மையங்களிலும் முன்பதிவு செய்துகொள்ளலாம்.
பொதுமக்கள் அரசின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கத்தினை பயன்படுத்திக் கொண்டு தங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு முன்பதிவு செய்து கொண்டு பாதுகாப்பு அம்சங்கள் அனைத்தையும் பின்பற்றி பயணம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.