தேன்(HONEY) நெல்லி(AMLA) – சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!!
தேனில்(honey) ஊறவைத்த நெல்லிக்காய்(Amla) :
- தேனில் ஊறவைத்த நெல்லிக்காய் சாப்பிடும்படி பலராலும் வலியுறுத்தப்படுகிறது. இந்த தேன் நெல்லி, கடைகளிலும் கிடைக்கிறது. இதை தினமும் சாப்பிடுவதால் கிட்டும் நன்மைகள் என்னவென்று பார்ப்போம்.
- ரத்தம் சுத்தமாவதோடு, ரத்த அணுக்களின் அளவு அதிகரித்து, ரத்த சோகை நீங்கும்.
இந்த செய்தியையும் படிங்க…
- இதயத் தசைகள் வலிமையடைந்து, இதய நோய்கள் வருவது தடுக்கப்படும்.
- தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை தினமும் காலையில் சாப்பிட்டால், முகப் பொலிவு அதிகரிக்கும். சருமம் அழகாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.
- முடி கொட்டும் பிரச்சினை உள்ளவர்கள் தேன் நெல்லிக் காயைச் சாப்பிட்டு வந்தால் அதில் உள்ள மருத்துவக் குணங்களால் முடி கொட்டுதல் தடுக்கப்படும். ரோமக்கால்கள் வலுவடைந்து, முடியின் வளர்ச்சி அதிகமாகும்.
- கண் பிரச்சினை உள்ளவர்கள், தினமும் தேனில் ஊற வைத்த நெல்லிக்காயைச் சாப்பிட்டு வந்தால், கண்களில் ஏற்படும் எரிச்சல், கண்களில் இருந்து நீர் வடிதல், கண்கள் சிவப்பாதல் போன்றவை குணமாகும்.
- தேனில் நெல்லிக்காயை ஊற வைத்துச் சாப்பிட்டால், சிறுநீர் மற்றும் சிறுநீரகம் தொடர்பான பிரச்சினைகள் வருவது தடுக்கப்படும், அப்பிரச்சினைகள் இருந்தாலும் குணமாகி விடும்.
- அடிக்கடி ஜலதோஷம், தொண்டைப்புண்ணால் கஷ்டப்படுபவர்கள், தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை சாப்பிட்டுவர வேண்டும். அதன்மூலம், உடலில் சேர்ந்த சளி அனைத்தும் வெளியேறிவிடுவதோடு, தொண்டைப்புண்ணும் குணமாகும்.
இந்த செய்தியையும் படிங்க…
- அசிடிட்டி பிரச்சினை உள்ளவர்கள் தேனில் ஊறிய நெல்லிக்காயைச் சாப்பிட்டு வந்தால், நல்ல நிவாரணம் கிடைக்கும்.
- பசியின்மையால் அவதிப்படுபவர்கள், தேனில் ஊறவைத்த நெல்லிக்காயை தினமும் உட்கொண்டு வந்தால் நிவாரணம் கிட்டும்.