தேசிய வானிலை முன்னறிவிப்பு மையம்- விடுத்துள்ள முன்னெச்சரிக்கை..!! - Tamil Crowd (Health Care)

தேசிய வானிலை முன்னறிவிப்பு மையம்- விடுத்துள்ள முன்னெச்சரிக்கை..!!

 தேசிய வானிலை முன்னறிவிப்பு மையம்- விடுத்துள்ள முன்னெச்சரிக்கை..!!

தென்மேற்கு பருவமழை இன்று தொடங்க வாய்ப்பு:

தென்மேற்கு பருவமழை இன்று தொடங்க வாய்ப்பு இருப்பதாக தேசிய வானிலை முன்னறிவிப்பு மையம் தெரிவித்துள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தேசிய வானிலை முன்னறிவிப்பு மையம் விடுத்துள்ள முன்னெச்சரிக்கை:

டவ்-தே புயல் குஜராத் மற்றும டையூ பகுதிகளில் கரையையை கடந்ததை தொடர்ந்து கிழக்கு ராஜஸ்தான் மற்றும் மேற்கு மத்திய பிரதேசத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையாக நிலைகொண்டிருந்தது.

         இந்த செய்தியையும் படிங்க….

 கருப்பு பூஞ்சையை(Black Fungi)விட ஆபத்தான வெள்ளை பூஞ்சை தொற்று..!!  

மேலும் வலுவிழந்து வடகிழக்கு திசையை நோக்கி நகர்ந்து, உத்தரப்பிரதேசத்தை நோக்கி சென்றது. இதனைத் தொடர்ந்து மத்திய அசாமில் கடல் மட்டத்திலிருந்து 0.9 கிலோமீட்டர் உயரத்திலும், தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடல் மட்டத்திலிருந்து 3.1 கிலோமீட்டர் முதல் 5.8 கிலோமீட்டர் உயரத்திலும் சூறாவளி சுழற்சி தொடர்கிறது. வடக்கு அந்தமான் கடல் மற்றும் கிழக்கு மத்திய வங்ககடலில் மே 22 அன்று ஓர் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும்.

தெற்கு அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக் கடலை ஒட்டியுள்ள பகுதியில் தென்மேற்கு பருவமழை இன்று (மே 21-ம் தேதி) தொடங்கக்கூடும்.

Leave a Comment