தெரியாத எண்ணில் இருந்து வீடியோ கால்-போலீசார் எச்சரிக்கை..!! - Tamil Crowd (Health Care)

தெரியாத எண்ணில் இருந்து வீடியோ கால்-போலீசார் எச்சரிக்கை..!!

 தெரியாத எண்ணில் இருந்து வீடியோ கால்-போலீசார் எச்சரிக்கை..!!

தெரியாத போன் நம்பரில் இருந்து வீடியோ கால்கள் வந்தால், அதைத் தொடர்பு வேண்டாம் என்று கேரள சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.

வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக் மெசஞ்சர் வீடியோ மூலம் நிர்வாணப் படங்களை அனுப்பி அதன் மூலம் பணம் பறிக்கும் கும்பல் பற்றி கேரள மாநிலம் கொச்சி போலீசாருக்கு ஏராளமான புகார்கள் வந்தன.

இந்த செய்தியையும் படிங்க….

 மே 1ம் தேதி முதல் -ஆசிரியர்கள் பள்ளிக்கு வரத் தேவையில்லை: என பள்ளிக்கல்வி இயக்குநர் சுற்றறிக்கை..!! 

அதில் குற்றவாளிகள், ஒருவரை வீடியோ காலில் அழைப்பார்கள். பெண்களின் நிர்வாணப் புகைப்படங்களை அனுப்புவார்கள். அதை அவர் பார்க்கும்போது ஸ்கிரீன்ஷாட் அல்லது வீடியோ எடுத்து வைத்துக்கொள்வார்கள். பெண்கள் என்றால், ஆண்களின் நிர்வாணப் படங்களை அனுப்பி வீடியோ அல்லது ஸ்கிரீன் ஷாட் எடுத்து வைத்துக்கொண்டு மிரட்டத் தொடங்குவார்கள்.

சிலர் பயந்து பணம் கொடுக்கத் தொடங்கினால், அவர்களை மிரட்டி தொடர்ந்து பணம் கேட்டுக் கொண்டே இருப்பார்கள். இல்லை என்றால், அந்த ஸ்கிரீன்ஷாட்டை அவர்களின் நண்பர்கள், உறவினர்களுக்கு அனுப்பி வைத்து விடுவார்கள். இதை வட இந்தியாவை சேர்ந்த ஒரு கும்பல் தொழிலாகவே செய்து வருகிறது.

இதுபற்றி சைபர் கிரைம் போலீசார் கூறும்போது, இந்த கும்பலை கண்டுபிடிப்பது கஷ்டம் என்றும் தெரியாத எண்களில் இருந்து வாட்ஸ் அப், பேஸ்புக் மெசஞ்சரில் வீடியோ கால்கள் வந்தால் அதை எடுக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.

இந்த செய்தியையும் படிங்க….

 அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்படாது – மத்திய அரசு..!! 

தெரியாத நபர்களிடம் சாட் செய்ய வேண்டாம் என்றும் பேஸ்புக் புரஃபைலை எப்போதுமே லாக் செய்து வைத்திருக்குமாறும் குற்றவாளிகள் பணம் கேட்டு மிரட்டினால் கொடுக்க வேண்டாம் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Leave a Comment