திறனறிதல் புத்தக வினியோகம் -சமூக இடைவெளியின்றி ஆசிரியர்கள்..!!
பல்லடத்தில், நோய் தொற்று பரவலையும் பொருட்படுத்தாமல், திறனறிதல் பயிற்சி புத்தகம் பெற ஆசிரியர்கள் ஒரே இடத்தில் குவிந்தனர்.தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளுக்கு திறனறிதல் பயிற்சி புத்தகம் இன்று வினியோகிக்கும் பணி நடந்தது.அரசு துவக்க, நடுநிலை பள்ளிகளுக்கான புத்தகம் வினியோகிக்கும் பணி, பல்லடம் ப.வடுகபாளையம் நகராட்சி பள்ளியில் நேற்று துவங்கியது.நோய் தொற்று பரவலையும் பொருட்படுத்தாமல் ஆசிரியர்களும், பெற்றோரும் பள்ளியில் குவிந்தனர். ஒட்டுமொத்தமாக ஆசிரியர்களை வரவழைக்காமல், நேரம் நிர்ணயித்து புத்தகங்களை பிரித்து கொடுத்திருக்கலாமே என, பெற்றோர் சிலர் புலம்பியபடி சென்றனர்.
இந்த செய்தியையும் படிங்க…
2 நாட்கள் முழு ஊரடங்கு – அதிரடி அறிவிப்பு !!
ஆசிரியர்களிடம் கேட்டதற்கு, ‘புத்தகங்கள் வந்து ஒரு வாரத்துக்கு மேல் ஆகிறது. திடீரென, 20ம் தேதிக்குள் வினியோகிக்கப்பட வேண்டும் என, உத்தரவிடப்பட்டது.இதனால் அனைத்து பள்ளி ஆசிரியர்களும் புத்தகங்களை எடுத்து செல்ல வருமாறு கூறினர். அதன்படி, அனைவரும் காலை 10.00 மணிக்கு வந்தோம்,’ என்றனர்.ஒரே நேரத்தில் ஆசிரியர்கள் கூடியது, கொரோனா தொற்று பரவலுக்கு வழிவகுத்து விடும் என, சுகாதார துறையினர் எச்சரிக்கின்றனர்.