திரும்பவுமா.. !! இனி இ பாஸ் இருந்தா தான் -சொந்த ஊருக்கு போக முடியும் - அரசு அறிவிப்பு.. !! - Tamil Crowd (Health Care)

திரும்பவுமா.. !! இனி இ பாஸ் இருந்தா தான் -சொந்த ஊருக்கு போக முடியும் – அரசு அறிவிப்பு.. !!

 திரும்பவுமா.. !! இனி இ பாஸ் இருந்தா தான் -சொந்த ஊருக்கு போக முடியும் – அரசு அறிவிப்பு.. !!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த, கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே இரவுநேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு முடக்கம் அமலில் இருக்கும் நிலையில் இந்த புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அதன்படி நேற்று அறிவித்த புதிய கட்டுப்பாடுகளில் போக்குவரத்து தொடர்பாக சில அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. இதில் இ பாஸ் மீண்டும் கட்டாயமாக்கப்பட்டள்ளது. அதன்படி, தமிழகத்தில் தனியார் மற்றும் அரசு பேருந்துகளின் இருக்கைகளில் மட்டுமே அமர்ந்து மட்டு பயணிக்க அனுமதி, நின்று பயணிக்க அனுமதி இல்லை

ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர்த்து 2 பேர் மட்டுமே பயணிக்கலாம், வாடகை டாக்சியில் ஓட்டுநர் தவிர்த்து 3 பேர் மட்டுமே பயணிக்க அனுமதி அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டள்ளது.

அதேபோல், புதுச்சேரி தவிர்த்து ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்து வருவோருக்கு இ-பாஸ் கட்டாயம். அரசு இணையதளத்தில் இ-பாஸ் தொடர்பாக விண்ணப்பித்து, அனுமதி கிடைத்ததும் அதனை காண்பித்த பிறகே தமிழகத்திற்கு அனுமதிக்கப்படுவர். மேலும் கப்பல் மற்றும் விமானம் மூலம் வருவோர்களுக்கும் இ பாஸ் முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியையும் படிங்க….

42 ஆயிரத்தில்(42,000/-), -சென்னை தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை: தேர்வு கிடையாது..!! 

இந்த புதிய கட்டுப்பாடுகள் 26ஆம் தேதி அதிகாலை 4 மணி முதல் அமலுக்கு வருகின்றன என அரசு கூறியுள்ளது.

Leave a Comment